ta_tw/bible/other/beast.md

3.9 KiB

மிருகம், மிருகங்கள்

உண்மைகள்:

வேதாகமத்தில், "மிருகம்" என்பது "விலங்கு" என்பதை சொல்லும் மற்றொரு வழியாகும்.

  • ஒரு காட்டு மிருகம், காடு அல்லது வயல்களில் சுதந்திரமாக வாழ்கிற விலங்காகும்,மேலும் அது மனிதர்களால் பயிற்சியளிக்கப்படாததாகும்.
  • ஒரு வீட்டு மிருகம் மனிதர்களுடன் வாழ்ந்து, உணவிற்காகவோ அல்லது உழைப்புக்காகவோ அதாவது நிலத்தை உழுவதற்காக வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் "கால்நடை" என்பது இந்த வகையான விலங்குகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • பழைய ஏற்பாட்டின் புத்தகமாகிய தானியேல் மற்றும் புதிய ஏற்பாட்டு புத்தகமாகிய வெளிப்படுத்துதல் புத்தகம் தேவனை எதிர்க்கும் தீய சக்திகள் மற்றும் அதிகாரங்களை குறிக்கும் மிருகங்களைக் கொண்ட தரிசனங்களை விவரிக்கின்றன. (பார்க்கவும்: உருவகம்)
  • இந்த மிருகங்களில் சில, பல தலைகள் மற்றும் பல கொம்புகள் போன்ற விசித்திரமான அம்சங்களைக் கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் வல்லமையையும் அதிகாரத்தையும் கொண்டிருக்கின்றன, அவை நாடுகள், தேசங்கள், அல்லது பிற அரசியல் சக்திகளை அடையாளமாகக்குறிப்பிடலாம்.
  • இவைகளை மொழிபெயர்ப்பதற்கான வழிகள், "உயிரினம்" அல்லது "உருவாக்கப்பட்டவை" அல்லது "விலங்கு" அல்லது "காட்டு விலங்கு" ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.

(மேலும் காண்க: அதிகாரம், தானியேல், கால்நடைகள், தேசம், வல்லமை, வெளிப்படுத்துதல், பெயல்செபூல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H338, H929, H1165, H2123, H2416, H2423, H2874, H3753, H4806, H7409, G2226, G2341, G2342, G2934, G4968, G5074