ta_tw/bible/names/ur.md

2.4 KiB

ஊர்

உண்மைகள்:

ஊர் என்பது, மெசொப்பொத்தாமியாவின் ஒரு பகுதியாகிய கல்தேயா என்னும் பழம்பெரும் பிரதேசத்தில் உள்ள ஐபிராத்து நதியின் கரையில் அமைந்த முக்கியமான ஒரு நகரமாகும். இந்தப் பிரதேசமானது தற்போதுள்ள ஈராக் தேசத்தில் அமைந்திருந்தது.

  • ஆபிரகாம் ஊர் என்ற நகரத்தைச் சேர்ந்தவன். அந்த நகரத்தில் இருந்துதான், அவனைக் கானான் தேசத்திற்குப் போகும்படி தேவன் அழைத்தார்.
  • ஆபிரகாமின் சகோதரனும், லோத்துவின் தந்தையுமாகிய ஆரான், ஊர் என்னும் நகரத்தில் மரணமடைந்தான். லோத்துவும் ஆபிரகாமுடன் சேர்ந்து ஊர் என்னும் நகரத்திலிருந்து புறப்படுவதற்கு அனேகமாக இந்த நிகழ்வு கூடத் தூண்டியிருக்கலாம்.

(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்ப்பது

(மேலும் பார்க்க: ஆபிரகாம், கானான், கல்தேயா, ஐபிராத்து நதி, ஆரான், லோத்து, மெசொப்பொத்தாமியா)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H218