ta_tw/bible/names/lot.md

2.3 KiB

லோத்து

உண்மைகள்:

லோத்து ஆபிரகாமின் மருமகன்.

  • அவர் ஆபிரகாமின் சகோதரன் ஆரானின் மகன்.
  • லோத்து கானானின் தேசத்திற்கு ஆபிரகாமுடன் பயணம் செய்து சோதோமின் நகரத்தில் குடியேறினார்.
  • லோத்து மோவாபியருக்கும் அம்மோன் புத்திரருக்கும் மூதாதையர்.
  • எதிரிகளின் ராஜாக்கள் சோதோமைத் தாக்கி, லோத்தை கைப்பற்றினபோது, ​​ஆபிரகாம் பல நூறு பேரைக் கொண்டு லோத்துவை மீட்பதற்காகவும், தன் உடைமைகளை மீட்கவும் வந்தான்.
  • சோதோமின் நகரத்திலிருந்த ஜனங்கள் மிகவும் துன்மார்க்கர்; தேவன் அந்த நகரத்தை அழித்தார். ஆனால், லோத்து மற்றும் அவருடைய குடும்பத்தாரை நகரத்திலிருந்து வெளியேற்றுவதற்கு முதலில் அவர் சொன்னார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆபிரகாம், அம்மோன், ஆரான், மோவாப், சோதோம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3876, G3091