ta_tw/bible/names/johntheapostle.md

6.0 KiB

யோவான் (அப்போஸ்தலன்)

உண்மைகள்:

யோவான் இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராகவும் இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவும் இருந்தார்.

  • யோவானும் அவருடைய சகோதரனான யாக்கோபும் செபெதேயு எனும் ஒரு மீனவரின் மகன்கள்.
  • இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதிய சுவிசேஷத்தில், "இயேசு நேசித்த சீஷன்" என்று தன்னைத்தானே யோவான் குறிப்பிட்டார். யோவான் இயேசுவின் நெருங்கிய நண்பராக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
  • அப்போஸ்தலனாகிய யோவான் ஐந்து புதிய ஏற்பாட்டு புத்தகங்களை எழுதினார்: யோவானின் சுவிசேஷம்,வெளிப்படுத்துதல், மற்ற விசுவாசிகளுக்கு எழுதிய மூன்று கடிதங்கள்.
  • யோவான் ஸ்நானகனைவிட அப்போஸ்தலன் யோவான் வித்தியாசமானவர் என்பதை நினைவில் கொள்க.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்)

(மேலும் காண்க: அப்போஸ்தலன், வெளிப்படுத்தல், யாக்கோபு (செபதேயுவின் மகன்), யோவான் (ஸ்நானகன்), செபெதேயு

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 36:1 ஒரு நாள், இயேசு தம் சீடர்களில் மூன்று பேதுரு, பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவான் ஆகியோரை அவருடன் இருக்கும்படித் தேர்ந்தெடுத்தார். (யோவான் என்ற பெயருடைய சீடர் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே மனிதர் அல்ல). அவர்கள் ஒரு உயர்ந்த மலையின்மேல் ஏறிக்கொண்டார்கள்.
  • 44:1 ஒரு நாள், பேதுரு மற்றும் யோவான் தேவாலயத்திற்கு சென்றார்கள். அவர்கள் ஆலய நுழைவாயிலுக்கு வந்தபோது, ​​பிச்சை எடுக்கிற ஒரு ஊனமுற்ற மனிதன் அவர்களைக் கண்டார்கள்.
  • 44:6 பேதுருமற்றும் யோவான் சொன்னதைக்கேட்டு தேவாலயத்தின் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனவே அவர்கள் அவர்களை கைது செய்து சிறையில் தள்ளினர்.
  • 44:7 அடுத்த நாள், யூத தலைவர்கள் பேதுரு மற்றும் யோவானை பிரதான ஆசாரியனிடமும் மற்ற மதத் தலைவர்களிடமும் கொண்டு வந்தார்கள். அவர்கள் பேதுருவையும் யோவானையும் நோக்கி, " எந்த ஆற்றலினால் இந்த ஊனமுற்ற மனிதனை நீங்கள் குணப்படுத்தினீர்கள்?" என்று கேட்டனர்.
  • 44:9 பேதுருவும் __ யோவானும்_ மிகவும் தைரியமாக பேசியதைத் தலைவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்; ஏனென்றால், இந்த ஆண்கள் சாதாரண மனிதர்களாக கல்லாதவர்களாக இருந்தனர். ஆனால் அந்த மனிதர்கள் இயேசுவோடு இருந்தார்கள் என்பதை அறிந்துகொண்டனர். அவர்கள் பேதுருவும் யோவானும் அச்சுறுத்தப்பட்ட பின்னர், அவர்கள் அவர்களை விட்டுவிட்டார்கள்.

சொல் தரவு:

  • Strong's: G2491