ta_tw/bible/names/hittite.md

3.1 KiB

ஏத்தியன், ஏத்தியர்கள்

வரையறை:

ஏத்தியர் காமின் குமாரனாகிய கானானின் வழியாய் வந்த வம்சத்தார். இப்போது துருக்கி மற்றும் வடக்கு பாலஸ்தீனம் ஆகியவற்றில் அமைந்துள்ள ஒரு பெரிய பேரரசு ஆனது.

ஆபிரகாம் ஏத்தியனான எபிரோனிடமிருந்து ஒரு சொத்தை வாங்கி, இறந்துபோன மனைவியாகிய சாராளை அங்கே ஒரு குகையிலே அடக்கம் செய்தார். கடைசியில் ஆபிரகாமும் அவரது சந்ததியாரும் அந்த குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஏசா இரண்டு ஏத்திய பெண்களை திருமணம் செய்தபோது ஏசாவின் பெற்றோர் துக்கப்பட்டார்கள். தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன் ஏத்தியனாகிய உரியா என்பவனாவான்.

  • சாலொமோன் திருமணம் செய்துகொண்ட சில புரஜாதிப் பெண்கள் ஏத்தியர் ஆவர். இந்த புறஜாதிப் பெண்கள் சாலொமோனின் இருதயத்தை அவர்கள் வணங்கிய பொய் தெய்வங்களின் காரணமாக தேவனிடமிருந்து விலக்கிவிட்டார்கள்.

ஏத்தியர்கள் பெரும்பாலும் இஸ்ரவேலர்களுக்கும், சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய ரீதியிலும் அச்சுறுத்தலாக இருந்தனர்.

(மேலும் காண்க: சந்ததி, ஏசா, வெளிநாட்டவர், காம், வலிமை, சாலொமோன், உரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2850