ta_tw/bible/names/uriah.md

3.9 KiB

உரியா

உண்மைகள்:

உரியா என்பவன் நீதிமானும், தாவீது இராஜாவின் மிகச் சிறந்த போர்வீரர்களில் ஒருவனாகவும் இருந்தான். இவன் அடிக்கடி “ஏத்தியனாகிய உரியா” என்று குறிப்பிடப்படுகிறான்.

  • உரியாவிற்கு பத்சேபாள் என்னும் பெயருள்ள மிக அழகான மனைவி இருந்தாள்.
  • தாவீது உரியாவின் மனைவியினிடத்தில் விபச்சாரம் செய்தான். அதனால் அவள் தாவீதின் குழந்தையைக் கர்ப்பந்தரித்தாள்.
  • தாவீது இந்தப் பாவத்தை மூடுவதற்காக, உரியா யுத்தத்திலே சாகும்படி செய்தான். பின்பு தாவீது பத்சேபாளை திருமணம் செய்தான்.
  • ஆகாஸ் இராஜாவின் காலத்தில் உரியா என்னும் பெயருள்ள இன்னொரு மனிதன் ஆசாரியனாக இருந்தான்.

(மொழிப்பெயர்ப்பு சிபாரிசிகள்: பெயர்களை எப்படி மொழிப்பெயர்ப்பது

(மேலும் பார்க்க: ஆகாஸ், பத்சேபாள், தாவீது, ஏத்தியன்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் ககதைகளிளிருந்து உதாரணங்கள்:

  • 17:12 பத்சேபாளின் கணவனாகிய, உரியா என்னும் பெயருள்ள மனிதன் தாவீதின் மிகச் சிறந்த போர்வீரர்களில் ஒருவனாக இருந்தான். தாவீது உரியாவை யுத்தத்திலிருந்து வரவழைத்து, அவனை அவன் மனைவியோடு இருக்கும்படி சொன்னான். ஆனால் _உரியா-, மற்ற போர்வீரர்கள் அனைவரும் யுத்த களத்தில் இருப்பதால் வீட்டுக்குப் போக மறுத்துவிட்டான். ஆகவே தாவீது உரியாவை மீண்டும் யுத்த களத்திற்கு அனுப்பினான். மேலும் அவன் இராணுவ அதிகாரியிடம், உரியா கொல்லப்படும்படியாக அவனை பலம்வாய்ந்த எதிரிகள் அதிகமுள்ள பகுதியில் நிறுத்தும்படி சொன்னான்.
  • 17:13 உரியா கொல்லப்பட்ட பிறகு, தாவீது பத்சேபாளை திருமணம் செய்தான்.

சொல் தரவு:

  • Strong's: H223, G3774