ta_tw/bible/names/bathsheba.md

4.2 KiB

பத்சேபாள்

உண்மைகள்:

தாவீது ராஜாவின் படைவீரனான உரியாவின் மனைவி பத்சேபாள் ஆவாள். உரியாவின் மரணத்திற்குப் பின்,அவள் தாவீதின் மனைவியும் சாலொமோனின் தாயும் ஆனாள்.

  • பத்சேபாள் உரியாவுக்கு மனைவியாக இருந்தபோது தாவீது பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தான்.
  • பத்சேபாள் தாவீதினால் கர்ப்பமானபோது, உரியா போரில் கொல்லப்படும்படி ​​தாவீது ஏற்பாடுகளைச் செய்தான்.

தாவீது பத்சேபாளை மணந்தான், அவர்களுடைய குழந்தையை அவள் பெற்றெடுத்தாள்.

  • தாவீதின்குழந்தை பிறந்த சில நாட்களிலே மரிக்கும்படி செய்து, தேவன் இவ்விதமாக தாவீது செய்த பாவத்திற்காக அவனைத் தண்டித்தார்.

பின்னர், பத்சேபாள் சாலொமோன் என்னும் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தை வளர்ந்து தாவீதுக்குப் பிறகு இராஜாவானான்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: தாவீது, சாலொமோன், உரியா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 17:10 ஒரு நாள், தாவீதின் படைவீரர்கள் யுத்ததளங்களில் போரிட்டுக்கொண்டிருந்தபோது, ​​அவர் ஒரு பிற்பகல் தூக்கத்திலிருந்து எழுந்து ஒரு அழகான பெண் குளிப்பதைக் கண்டார். அவளது பெயர் பத்சேபாள் ஆகும்.
  • 17:11 சிலகாலம் கழித்து __ பத்சேபாள் __ தாவீதிடம் கர்ப்பமாக இருப்பதாக தகவல் அனுப்பினாள்.
  • 17:12 பத்சேபாளின் கணவன், உரியா என்பவன், தாவீதின் சிறந்த வீரர்களில் ஒருவனாக இருந்தான்.
  • 17:13 உரியா கொல்லப்பட்ட பிறகு, தாவீது பத்சேபாளைத் திருமணம் செய்தான்.
  • 17:14 பின்னர், தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் மறுபடியும்குழந்தை பிறந்தது.அதற்கு சாலொமோன் என்று பெயரிட்டார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H1339