ta_tw/bible/names/hamath.md

2.7 KiB

ஆமாத், ஆமாத்தியன், லெபோ ஆமாத்

உண்மைகள்:

ஹமாத் வடக்கு சிரியாவிலுள்ள முக்கிய நகரமாக இருந்தது, கானானின் தேசத்திற்கு வடக்கே. ஆமாமின் குமாரனாகிய கானானின் சந்ததியார் ஆமாத்தியர்கள்என்று அழைக்கப்பட்டார்கள்.

  • "லேபோ ஹமாத்" என்ற பெயர் ஒருவேளை ஆமாத் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு மலைப்பாறை என்பதை குறிக்கிறது.
  • சில பதிப்புகள் "லெபோ ஹமாத்" "ஆமாத்தின் நுழைவாயில்" என மொழிபெயர்க்கின்றன.
  • தாவீது ராஜா, ஆமாத்தின் அரசனான தோவின் எதிரிகளைத் தோற்கடித்தார்.
  • சாலொமோனின் களஞ்சியமான நகரங்களில் ஒன்று ஆமாத்.
  • ராஜாவாகிய சிதேக்கியா நேபுகாத்நேச்சார் அரசனாலும் யோவாகாஸ் மன்னன் எகிப்திய மன்னனாலும் சிறைபிடிக்கப்பட்ட இடமாக ஆமாத் தேசம் இருந்தது.
  • "ஆமாத்தியன்" என்ற வார்த்தையை "ஆமாத்திலிருந்து வந்தவர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை மொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: பாபிலோன், கானான், நேபுகாத்நேச்சார், சிரியா, சிதேக்கியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2574, H2577