ta_tw/bible/names/galatia.md

3.0 KiB

கலாத்தியா, கலாத்தியர்

உண்மைகள்:

புதிய ஏற்பாட்டு காலங்களில் கலாத்தியா ஒரு பெரிய ரோமானிய மாகாணமாக விளங்கியது, தற்போது துருக்கி நாட்டிற்கு மத்திய பகுதியாக உள்ளது.

  • கலாத்தியா பகுதி வடக்கே இருந்த கருங்கடலின் எல்லை. இது ஆசியா, பித்தினியா, கப்பத்தோக்கியா, சிலிசியா, மற்றும் பம்பிலியா மாகாணங்களின் எல்லையாக இருந்தது.
  • கலாத்தியா மாகாணத்தில் வசித்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதம் "கலாத்தியர்" என்ற புதிய ஏற்பாட்டு புத்தகமாகும்.
  • பவுல் தன்னுடைய கடிதத்தை கலாத்தியர்களுக்கு எழுதியதன் ஒரு காரணம் கிரியையினால் இரட்சிப்பு இல்லை, கிருபையினால் நற்செய்தியின்மூலம் என்று மறுபடியும் வலியுறுத்துவதே ஆகும்.
  • சில யூத சட்டங்களை விசுவாசிகள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று யூத கிறிஸ்தவர்கள் அங்கு தவறான போதனைகளைக் கற்பித்தார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆசியா, நம்பிக்கை, சிலிசியா, நற்செய்தி, பவுல், வேலைகள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G1053, G1054