ta_tw/bible/names/cilicia.md

2.0 KiB

சிலிசியா

உண்மைகள்:

சிலிசியா ஒரு சிறிய ரோமானிய மாகாணமாகும், இது தற்போதைய துருக்கியின் தென்கிழக்கு பகுதியாக உள்ளது. இது ஏஜியன் கடலை எல்லையாகக் கொண்டுள்ளது.

  • அப்போஸ்தலன் பவுல் சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்திலுள்ள ஒரு குடிமகன்.
  • தமஸ்குவுக்கு செல்லும் பாதையில் இயேசுவைச் சந்தித்தபின் பவுல் பல ஆண்டுகள் சிலிசியாவில் செலவிட்டார்.
  • சிலிசியாவிலிருந்த யூதர்களில் சிலர் ஸ்தேவானை எதிர்கொண்டு, அவரைக் கல்லெறிந்து கொல்லும்படி மக்களைத் தூண்டினார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பவுல், ஸ்தேவான், தர்சு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2791