ta_tw/bible/names/gabriel.md

3.3 KiB

காபிரியேல்

உண்மைகள்:

காபிரியேல் தேவனின் தேவதூதர்களில் ஒருவரானார். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் பலமுறை அவர் பெயர் குறிப்பிடப்படுகிறது.

தீர்க்கதரிசியாகிய தானியேல் கண்ட ஒரு தரிசனத்தின் அர்த்தத்தை சொல்ல தேவன் காபிரியேலை அனுப்பினார்.

  • மற்றொருமுறை தானியேல் ஜெபம் செய்தபோது, ​​காபிரியேல் தூதன் அவரிடம் பறந்துவந்து, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி முன்னறிவித்தார். தானியேல் அவரை "மனிதன்" என்று விவரித்தார்.
  • புதிய ஏற்பாட்டில், காபிரியேல் சகரியாவிடம் வந்தபோது, ​​அவருடைய வயது முதிர்ந்த மனைவி எலிசபெத்துக்கு மகன் யோவான் பிறப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.
  • ஆறாவது மாதத்திற்குப் பிறகு, "தேவனுடைய மகன்" எனக் கருதும் குழந்தையை அற்புதமாக கருத்தரிக்க தேவன் உதவிசெய்யப்போகிறார் என்பதைக் கூறும்படி காபிரியேல் மரியாளிடம் அனுப்பப்பட்டார். காபிரியேல் மரியாளிடம், "பிறக்கப்போகும் குழந்தைக்கு இயேசு" என்று பெயரிடும்படிக் கூறினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க தேவதூதன்](../kt/angel.md), தானியேல், எலிசபெத், யோவான்(ஸ்நானகன்) , மரியாள், தீர்க்கதரிசி, தேவனுடைய குமாரன், [சகரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1403, G1043