ta_tw/bible/names/caesarea.md

3.2 KiB

செசரியா, செசரியா பிலிப்பி

உண்மைகள்:

செசரியா, மத்திய தரைக் கடலின் கரையில் அமைந்த ஒரு முக்கிய நகரமாக இருந்தது,இது கர்மேல் மலைக்கு சுமார் 39 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. செசரியா பிலிப்பி நகரம் இஸ்ரவேலின் வடகிழக்கு பகுதியில் எர்மோன் மலை அருகே அமைந்துள்ள ஒரு நகரமாக இருந்தது,.

  • ரோம சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த இராயனுக்காக இந்த நகரங்கள் பெயரிடப்பட்டன.
  • கடற்கரை செசரியா இயேசு பிறந்த காலத்தில் ரோம மாகாணமான யூதேயாவின் தலைநகரமாக மாறியது.
  • செசரியாவிலுள்ள புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு முதன்முதலாக பிரசங்கித்தார்.
  • பவுல் செசரியாவிலிருந்து தர்சுவுக்கு கப்பலேறி, தனது மிஷனரி பயணத்தின்போது இந்த நகரத்தை கடந்து சென்றார்.
  • இயேசுவும் அவருடைய சீஷர்களும் சீரியாவிலுள்ள பிலிப்பி செசரியாவை சுற்றியிருந்த பிராந்தியத்தில் பயணித்தார்கள். எரோதுக்குப்பின் இரண்டு நகரங்களுக்கும் பிலிப்பி எனப் பெயரிடப்பட்டது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: இராயன், புறஜாதி, கடல், கர்மேல், எர்மோன் மலை, ரோம், தர்சு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2542, G5376