ta_tw/bible/names/caesar.md

3.6 KiB

இராயன்

உண்மைகள்:

" இராயன் " என்பது ரோம சாம்ராஜ்யத்தின் பல ஆட்சியாளர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பெயர் அல்லது பட்டம் ஆகும். வேதாகமத்தில் இந்த பெயர் மூன்று வெவ்வேறு ரோம ஆட்சியாளர்களை குறிக்கிறது.

  • இராயன் என்ற பெயரில் இருந்த முதல் ரோம ஆட்சியாளர் இயேசு பிறந்த சமயத்தில் ஆட்சி செய்த "அகஸ்து இராயன்" ஆவார்.
  • சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு, யோவான் ஸ்நானகன் பிரசங்கித்த சமயத்தில் திபேரியு இராயன் ரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராக இருந்தார்.
  • திபேரியு இராயன் ரோம ஆளுநராக இருந்தபோது, இயேசு மக்களிடம் இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுக்கும்படியும் கட்டளையிட்டார், தேவனுக்குரியதை தேவனுக்கு கொடுக்கும்படி கட்டளையிட்டார்.
  • பவுல் இராயனுக்கு வேண்டுகோள் விடுத்த காரியத்தில், இராயன் " என்று பெயர் ரோம பேரரசரான நீரோவை குறிக்கிறது "
  • "இராயன் என்பது ஒரு தலைப்பாக பயன்படுத்தப்பட்டால், அதை "பேரரசர்" அல்லது "ரோமானிய ஆட்சியாளர்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • அகஸ்து இராயன் அல்லது திபெரியு இராயன் போன்ற பெயர்களில் உள்ள, " இராயன் என்பது" ஒரு தேசிய மொழியில் அது எப்படி உச்சரிக்கப்படுமோ அதற்கு நெருக்கமாக உச்சரிக்கப்படலாம் .

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ராஜா, பவுல், ரோம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2541