ta_tw/bible/names/carmel.md

2.6 KiB

கர்மேல், கர்மேல் மலை

உண்மைகள்:

" கர்மேல் மலை " என்பது ஒரு மலைத் தொடரை குறிக்கிறது. இது சாரோனின் சமவெளிக்கு வடக்கே மத்தியதரைக் கடல் கடலில் அமைந்துள்ளது. அதன் உயர்ந்த சிகரம் 546 மீட்டர் உயரமாகும்.

யூதாவில் உப்புக் கடலுக்கு தெற்கே " கர்மேல் " என்ற நகரமும் இருந்தது.

  • செல்வச் செழிப்புள்ள நாபாலும் அவனுடைய மனைவி அபிகாயிலும் கர்மேல் ஊருக்கு அருகே வாழ்ந்தார்கள்; அங்கே தாவீதும் அவன் மனுஷரும் நாபாலின் ஆடுகளைக் கவனித்துக் காப்பாற்றினார்கள்.
  • கர்மேலின் மலையில், எலியா, உண்மையான ஒரே கடவுள் யார் என்பதை நிரூபிக்க ஒரு போட்டியின் மூலம் பாகால் தீர்க்கதரிசிகளை சவாலிட்டார்.
  • இது ஒரு மலை மட்டும் அல்ல, " கர்மேல் மலை ", என்பதை " கர்மேல் மலைத்தொடரில் உள்ள மலை" அல்லது " கர்மேல் மலைத்தொடர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்க: பாகால், எலியா, யூதா, உப்பு கடல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3760, H3761, H3762