ta_tw/bible/kt/gentile.md

3.2 KiB

புறஜாதி, புறஜாதிகள்

உண்மைகள்:

" புறஜாதி " என்ற வார்த்தை ஒரு யூதனைக் குறிக்கும் எவரையும் குறிக்கிறது. புறஜாதிகள் என்பவர்கள் யாக்கோபின் சந்ததியாரல்ல.

  • வேதாகமத்தில், "விருத்தசேதனமில்லாத" என்ற வார்த்தை, புறஜாதியாரை குறிக்க பயன்படுத்தப்படுகிறது, ஏனென்றால் இஸ்ரவேலர் விருத்தசேதனம் செய்யப்பட்டதுபோல புறஜாதி குடும்பத்தாரைச் சேர்ந்த ஆண் பிள்ளைக களில் பலர் விருத்தசேதனம் செய்யவில்லை.
  • தேவன் யூதர்களை தம்முடைய விசேஷ ஜனங்களைத் தேர்ந்தெடுத்ததால், புறஜாதிகள் ஒருபோதும் தேவனுடைய மக்களாக முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள்.
  • யூதர்கள் ",இஸ்ரவேலர்கள்" அல்லது "எபிரெயர்கள்" என்றும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் வேறு யாரையும் "புறதேசத்தார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
  • புறதேசத்தார் என்பதை "யூதனல்லாதவர்" அல்லது "யூதர் அல்லாதவர்" அல்லது "ஒரு இஸ்ரவேல் அல்ல" (பழைய ஏற்பாடு) அல்லது "யூதன் அல்லாதவர்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • பாரம்பரியமாக, யூதர்கள் புறதேசத்தாரோடு சேர்ந்து சாப்பிடுவதும் இல்லை, இதனால் ஆரம்பகால சபைக்குள்ளே பிரச்சினைகள் ஏற்பட்டது.

(மேலும் காண்க: இஸ்ரேல், யாக்கோபு, யூதன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1471, G1482, G1484, G1672