ta_tw/bible/names/arabia.md

3.4 KiB

அரேபியா, அரேபியன், அரேபியர்கள்

உண்மைகள்:

அரேபியா உலகிலேயே மிகப்பெரிய தீபகற்பம் ஆகும், இது கிட்டத்தட்ட 3,000,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இது இஸ்ரேலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது, இதன் எல்லை செங்கடலில், அரேபிய கடலிலும், பாரசீக வளைகுடாவிலும் உள்ளது.

  • அரேபியாவில் வாழ்கிற அல்லது அரேபியாவுடன் சம்பந்தப்பட்டுள்ள ஒருவரைக் குறிக்க "அரேபியன்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

அரேபியாவில் வாழ்ந்து வந்த முந்தைய மக்கள் சேமின் பேரப்பிள்ளைகள் ஆவர். அரேபியாவில் வாழ்ந்த மற்ற முந்தைய மக்கள், ஆபிரகாமின் மற்ற மகனாகிய இஸ்மவேல் மற்றும் அவருடைய சந்ததியாரும், ஏசாவின் சந்ததியாரும் இருந்தனர்.

  • இஸ்ரவேலர் 40 ஆண்டுகளாக அலைந்து திரிந்த பாலைவன பகுதி அரேபியாவில் அமைந்திருந்தது.
  • இயேசுவை விசுவாசித்த பிறகு அப்போஸ்தலன் பவுல் அரேபியாவின் வனாந்தரத்தில் சில ஆண்டுகள் கழித்தார்.
  • கலாத்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பவுல், சீனாய் மலை அரேபியாவில் அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஏசா, கலாத்தியா, இஸ்மவேல், சேம், சீனாய்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6152, H6153, H6163, G688, G690