ta_tw/bible/names/adam.md

4.6 KiB

ஆதாம்

உண்மைகள்:

தேவன் முதலாவது மனிதனாக ஆதாமை படைத்தார். ஆதாமும் அவனது மனைவியாகிய ஏவாளும் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டனர்.

  • தேவன் ஆதாமை மண்ணினாலே உருவாக்கி அவன் நாசியிலே ஜீவ சுவாசத்தை ஊற்றினார்.
  • ஆதாமின் பெயர் எபிரேய வார்த்தையில் “சிவப்பு மண்” அல்லது “நிலம்” என்ற வார்த்தைக்கு ஒப்பிடலாம்.
  • ஆதாம் என்ற பெயர் பழைய ஏற்பாட்டு வார்தைகளாகிய “மனித இனம்” அல்லது “ மனிதன்” போன்றது.
  • எல்லா மக்களும் ஆதாம் ஏவாளின் சந்ததிகள்
  • ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு கீழ்ப்படியவில்லை. இக்காரியம் இவர்களை தேவனிடமிருந்து பிரித்ததுமின்றி மரணமும், பாவமும் உலகில் பிரவேசித்தது.

(மொழிப்பெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்கலாம்

(மேலும் பார்க்க: மரணம், சந்ததி, ஏவாள், தேவ சாயல், வாழ்க்கை)

வேதாகமக் குறிப்புக்கள்:

வேதத்தின் கதைகளிலிருந்து உதாரணங்கள்

  • 1:9 அதன் பின்பு கடவுள், “நாம் மனிதனை நம்முடைய சாயலாக நம்முடைய ரூபத்தில் உண்டாக்குவோம்.
  • 1:10 அவனுடைய பெயர் ஆதாம். கடவுள் ஒரு அழகிய தோட்டத்தை உண்டு பண்ணி, அதை பண்படுத்தவும், பாதுகாக்கவும் ஆதாமை அங்கே வைத்தார்.
  • 1:12 பின்பு கடவுள் “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல” என்று சொன்னார். ஆனால் எந்த ஒரு விலங்கும் ஆதாமுக்கு ஏற்றத் துணையாகக் காணப்படவில்லை.
  • 2:11 அதன் பின்பு கடவுள் அவர்களுக்கு விலங்குகளின் தோலினால் ஆடை செய்து உடுத்துவித்தார்.
  • 2:12 எனவே கடவுள் ஆதாமையும், ஏவாளையும் அந்த அழகியத் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார்.
  • 49:8 ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த போது, அது அவர்களுடைய சந்ததிகள் முழுவதையும் பாதித்தது.
  • 50:16 ஏனென்றால் ஆதாமும், ஏவாளும் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இந்த உலகத்திற்குப் பாவத்தைக் கொண்டு வந்தனர்.

சொல் தரவு:

  • Strong's: H120, G76