ta_tw/bible/kt/imageofgod.md

3.8 KiB
Raw Permalink Blame History

தேவனின் சாயல், படம்

வரையறை:

"சாயல்" என்ற வார்த்தை அது தன்மை அல்லது சாராம்சத்தில் வேறு ஏதேனும் ஒன்றைக் குறிக்கிறது சூழமைவைப் பொறுத்து, "தேவனின் சாயல்" என்ற சொற்றொடர் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

  • ஆரம்பத்தில், தேவன் தம்முடைய சாயலில் 'மனிதனைப்' படைத்தார். அதாவது, உணர்ச்சியை உணரும் திறன், நியாயம் மற்றும் தொடர்பு கொள்ளும் திறன், மற்றும் நித்தியமாக வாழ்கிற ஒரு ஆவி போன்ற தேவனின் சாயலை பிரதிபலிக்கும் மக்களுக்கு சில சிறப்பியல்புகள் உள்ளன.
  • தேவனுடைய மகனாகிய இயேசு, 'தேவனுடைய சாயல்' என்று வேதாகமம் சொல்கிறது, அதாவது, அவர் தேவனாக இருக்கிறார். மனிதர்களைப் போல் அல்லாமல், இயேசு படைக்கப்படவில்லை. எல்லா நித்தியத்திலிருந்தும் தேவனே எல்லா தெய்வீக குணாதிசயங்களையும் உடையவராக இருக்கிறார், ஏனென்றால் அவர் பிதாவாகிய தேவனோடு அதே சாயலில் இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இயேசுவைக் குறிப்பிடும்போது, "தேவனின் சாயல்" "தேவனின் துல்லியமான சாயல்" அல்லது "தேவன் போன்ற அதே சாராம்சம்" அல்லது "தேவனைப் போலவே" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • மனிதர்களைப் பற்றி குறிப்பிடுகையில், "தேவன் தம்முடைய சாயலாக அவர்களைப் படைத்தார்" என்ற சொற்றொடரை "தேவன் தம்மைப்போல அவர்களை உருவாக்கினார்" அல்லது "தேவன் தம்மைப் போன்ற பண்புகளை உடையவர்களாக படைத்தார்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: சாயல், தேவனுடைய மகன், தேவனுடைய குமாரன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4541, H1544, H2553, H6456, H6459, H6754, H6816, H8403, G504, G179