ta_tw/bible/names/eve.md

4.6 KiB

ஏவாள்

உண்மைகள்:

இது முதல் பெண்ணின் பெயர். அவரது பெயரின் அர்த்தம் "வாழ்க்கை" அல்லது "வாழ்தல்" என்பதாகும்.

  • தேவன் ஆதாமிலிருந்து வெளியே எடுத்த ஒரு விலா எலும்பிலிருந்து தேவன் ஏவாளைப் படைத்தார்.

ஆதாமின் "உதவியாளராக" இருக்கும்படி ஏவாள் உருவாக்கப்பட்டாள். ஆதாமுடன் சேர்ந்து தேவன் அவர்களுக்குக் கொடுத்த வேலையில் ஏவாள் உதவி செய்வதற்காகக் கொடுக்கப்பட்டாள்.

  • ஏவாள் சாத்தானால் (ஒரு பாம்பு வடிவில்) சோதிக்கப்பட்டாள், தேவன் சாப்பிட கூடாது என்று சொன்ன கனியை சாப்பிடுவதன் முதல் பாவம் செய்தாள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆதாம், வாழ்க்கை, சாத்தான்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 1:13 பின்னர் தேவன் ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை ஒரு பெண்ணாக மாற்றி, அவளை அவனிடம் அழைத்து வந்தார்.
  • 2:2 ஆனால் தோட்டத்தில் ஒரு வஞ்சகமுள்ள பாம்பு இருந்தது. அவன் அந்தப் பெண்ணைப் பார்த்து, "தோட்டத்திலுள்ள எந்த மரங்களிலிருந்தும் பழங்களை சாப்பிடக் கூடாதென்று தேவன் உங்களுக்குச் சொன்னாரா?"
  • 2:11 அந்த மனிதன அவனது மனைவிக்கு ஏவாள் என பெயரிட்டான், அதாவது "உயிர் கொடுப்பவர்" என்று அர்த்தம், ஏனென்றால் அவள் எல்லா மக்களுக்கும் தாயாக இருப்பாள்.
  • 21:1 ஏவாளின் சந்ததிஇலிருந்து பிறக்கும் குழந்தை சாத்தானுடைய தலையை நசுக்கும் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார்.
  • 48:2 சாத்தான் ஏவாளை ஏமாற்றும் பொருட்டு தோட்டத்தில் பாம்பு மூலம் பேசினான்.
  • 49:8 ஆதாம் மற்றும் ஏவாள் பாவம் செய்தபோது, ​​அது அவர்களுடைய சந்ததியாரைப் பாதித்தது.
  • 50:16 ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், இவ்வுலகத்திற்குள் பாவத்தை கொண்டு வந்ததால், தேவன் அதை சபித்தார், அதை அழிக்க முடிவு செய்தார்.

சொல் தரவு:

  • Strong's: H2332, G2096