ta_tw/bible/other/wolf.md

3.8 KiB

ஓநாய், ஓநாய்கள், காட்டு நாய்கள்

விளக்கங்கள்

ஓநாய் என்பது மூர்க்கமானதும், காட்டு நாயைப்போலவே தோற்றம் கொண்ட மாமிசம் உண்ணும் விலங்காகும்.

  • ஓநாய்கள் பொதுவாக கூட்டமாக வேட்டையாடுகின்றன. மேலும் அதன் இரையை புத்திசாலித்தனமாகவும், சந்தடி செய்யாமல் நிதானமாக குறிவைத்துப் பிடிக்கின்றன.
  • வேதாகமத்தில், “ஓநாய்கள்” என்ற பதம், ஆடுகளுக்கு ஒப்பிட்டுச் சொல்லப்படுகின்ற விசுவாசிகளை அழிக்கின்ற கள்ளப் போதகர்கள் அல்லது கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறிப்பிடுவதற்காக உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. தவறான போதனைகள், மக்களை அவர்களுக்கே தீங்கு விளைவிக்கும் தவறான காரியங்களை நம்பச்செய்கிறது.
  • ஆடுகள் ஓநாய்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. ஏனென்றால் அவைகள் பலவீனமானவைகளும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன என்ற உண்மையின் அடிப்படையில் இந்த ஒப்பீடு உள்ளது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்தப்பதம் “காட்டு நாய்” அல்லது காட்டு விலங்கு” என்றும் மொழிபெயர்க்கப்படமுடியும்.
  • காட்டு நாய்களுக்கு “நரி” அல்லது “கொயோடே (ஓநாயின் ஒரு வகை)” என்னும் மற்ற பெயர்களும் உண்டு.
  • மக்களைக் குறிக்க உருவகமாக பயன்படுத்தினால் “ஆடுகளைத் தாக்குகிற விலங்குகளைப்போல் மக்களைத் துன்புறுத்தும் தீய மனிதர்கள்” என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: தீமை, கள்ளத் தீர்க்கதரிசி, ஆடு, கற்பி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2061, H3611, G3074