ta_tw/bible/kt/evil.md

8.1 KiB

தீய, துன்மார்க்கன், துன்மார்க்கம்

வரையறை:

"தீய" மற்றும் "துன்மார்க்கன்" ஆகிய இரண்டு சொற்கள் தேவனுடைய பரிசுத்த குணாதிசயம் மற்றும் விருப்பத்திற்கு எதிரிடையான எதையும் குறிக்கிறது.

  • "தீமை" என்பது ஒரு நபரின் குணத்தை விவரிக்கக்கூடும் என்றாலும், "துன்மார்க்கன்" என்பது ஒரு நபரின் நடத்தைக்கு மேலானதாக இருக்கலாம். இருப்பினும், இரண்டு சொற்களும் மிகவும் ஒத்திருக்கிறது.
  • "துன்மார்க்கம்" என்ற வார்த்தை, மக்கள் பொல்லாத காரியங்களைச் செய்யும் போது இருக்கும் நிலையில் இருக்கிறது.
  • கொலை, திருடுவது, பழிவாங்குவது, கொடூரமானது, இரக்கமில்லாமல் நடந்துகொள்வது ஆகியவற்றால் மற்றவர்கள் மோசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் தீமைகளின் முடிவு.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலை பொறுத்து, "தீய" மற்றும் "துன்மார்க்கன்" ஆகிய சொற்கள் "கெட்ட" அல்லது "பாவம்" அல்லது "ஒழுக்கக்கேடு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • இவற்றின் மொழிபெயர்ப்பிற்கு மற்ற வழிகள் "நல்லவை அல்ல" அல்லது "நீதியற்றவை" அல்லது "ஒழுக்கமற்றவை" ஆகியவை அடங்கும்.
  • இந்த சொற்களை மொழிபெயர்க்க பயன்படுத்தும் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் இலக்கு மொழியில் இயல்பான சூழல் பொருந்தும் என்பதை உறுதிப்படுத்தவும்.

(மேலும் காண்க: கீழ்ப்படியாமை, பாவம், நல்லது, நீதிமான், பிசாசு)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 2:4 "நீங்கள் அதை சாப்பிட்டவுடன், நீங்கள் தேவனைப்போல் இருப்பீர்கள், அவரைப் போலநன்மை _தீமையை புரிந்துகொள்வீர்கள் என்று அவருக்குத் தெரியும்.."
  • 3:1 நீண்ட காலத்திற்கு பிறகு, பலர் உலகில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மிகவும் துன்மார்க்கர்களாகவும் மற்றும் கொடியவர்களாகவும் மாறினார்கள்.
  • 3:2 ஆனால் நோவா தேவனிடம் இரக்கம் பெற்றார். அவர் துன்மார்க்கமான மக்கள் மத்தியில் நீதியுள்ள மனிதனாக வாழ்ந்தார்.
  • 4:2 அவர்கள் தொடர்ந்து ஒன்று சேர்ந்து தீய காரியங்களை செய்துகொண்டிருப்பார்களானால் அவர்கள் இன்னும் அதிகமான பாவக் காரியங்களைச் செய்வார்கள் என்று தேவன் பார்த்தார்.
  • 8:12"நீங்கள் என்னை அடிமையாக விற்ற போது தீமை செய்ய முயன்றீர்கள், ஆனால் தேவன் தீமையை நன்மையாக மாற்றினார்!"
  • 14:2 அவர்கள் (கானானியர்) பொய் தெய்வங்களை வணங்கி, பல தீமையான காரியங்களை செய்தார்கள்.
  • 17:1 ஆனால் அவர் (சவுல்) தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒரு துன்மார்க்க மனிதனாக ஆனார். ஆகவே தேவன் அவனுடைய ஸ்தானத்தில் இராஜாவாகும்படி வேறொரு மனிதனைத் தேர்ந்தெடுத்தார்.
  • 18:11 இஸ்ரவேலின் புதிய ராஜ்யத்தில், எல்லா ராஜாக்களும் தீயவர்களாக இருந்தனர்.
  • 29:8 ராஜா மிகவும் கோபமாக இருந்தார், அவர் தனது கடனை முழுவதுமாக திருப்பிச் செலுத்தாத துன்மார்க்கனான வேலைக்காரனை சிறையில் தள்ளினார்.
  • 45:2 அவர்கள், " அவன் (ஸ்தேவான்) மோசேயையும் தேவனையும்குறித்து தீமையாக பேசுவதை நாங்கள் கேட்டோம் " என்று சொன்னார்கள்.
  • 50:17 அவர் (இயேசு) ஒவ்வொரு கண்ணீரையும் துடைப்பார், மேலும் துன்பம், துக்கம், அழுகை, தீமை, வலி, அல்லது மரணம் இருக்காது.

சொல் தரவு:

  • Strong's: H205, H605, H1100, H1681, H1942, H2154, H2162, H2617, H3415, H4209, H4849, H5753, H5766, H5767, H5999, H6001, H6090, H7451, H7455, H7489, H7561, H7562, H7563, H7564, G92, G113, G459, G932, G987, G988, G1426, G2549, G2551, G2554, G2555, G2556, G2557, G2559, G2560, G2635, G2636, G4151, G4189, G4190, G4191, G5337