ta_tw/bible/kt/demon.md

6.6 KiB

பிசாசு, தீய ஆவி, அசுத்த ஆவி

வரையறை:

இந்த எல்லா சொற்களும் பிசாசுகளைக் குறிக்கின்றன, அவை தேவனுடைய சித்தத்தை எதிர்க்கும் ஆவிகள் ஆகும்.

தேவன் தேவதூதர்களை அவரை சேவிக்கும்படி படைத்தார். பிசாசு தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தபோது, ​​தேவதூதர்களில் சிலரும் கலகம் செய்தார்கள், எனவே அவர்கள் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டார்கள். பிசாசுகள் மற்றும் தீய ஆவிகள் "விழுந்த தேவதூதர்கள்" என்று நம்பப்படுகிறது.

  • சில நேரங்களில் இந்த பிசாசுகள் "அசுத்த ஆவிகள்" என்று அழைக்கப்படுகின்றன. "அசுத்த" என்ற வார்த்தை "தூய்மையற்ற" அல்லது "தீமை" அல்லது "அசுத்தமாக" என்று பொருள்.
  • பிசாசுகள் சாத்தானுக்கு சேவை செய்வதால், அவர்கள் தீய காரியங்களை செய்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மக்களுக்குள் வாழ்ந்து அவர்களை கட்டுப்படுத்துகிறார்கள்.
  • பிசாசுகள் மனிதர்களைவிட சக்திவாய்ந்தவையாக இருக்கின்றன, ஆனால் தேவனைப் போன்ற சக்திவாய்ந்தவை அல்ல.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • " பிசாசு " என்ற வார்த்தையை "தீய ஆவி" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "அசுத்த ஆவி" என்ற வார்த்தை "தூய்மையற்ற ஆவி" அல்லது "கலகம் செய்யும் ஆவி" அல்லது "பொல்லாத ஆவி" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
  • இந்த வார்த்தையை மொழிபெயர்க்க பயன்படுத்தப்படும் வார்த்தை அல்லது சொற்றொடரானது பிசாசைக் குறிக்கும் வார்த்தைக்கு வித்தியாசமானதாக இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
  • " பிசாசு " என்ற வார்த்தை உள்ளூர் அல்லது தேசிய மொழியில் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். (பார்க்கவும்: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(காண்க: பிசாசு பிடித்தவர், சாத்தான், பொய் கடவுள், பொய் கடவுள், தேவதூதன், தீயவன், தூய்மை)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • __26:9__அவர்களில் பிசாசு பிடித்திருந்த பலர் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டனர். இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டபோது, ​​மக்களிடமிருந்து வெளிய வந்த __ பிசாசுகள் __ அடிக்கடி வந்து, "நீர் தேவனுடைய குமாரன்" என்று கூச்சலிட்டன.
  • 32:8 பிசாசுகள் __ அந்த மனிதனிலிருந்து வெளியே வந்து பன்றிகளுக்குள் நுழைந்தன.
  • __47:5_கடைசியாக ஒரு நாள் அடிமைப் பெண் பேச ஆரம்பித்தபோது, ​​பவுல் அவளிடம் திரும்பி அவளிடம் இருந்த பிசாசைப்பார்த்து, "இயேசுவின் பெயரில், அவளிடமிருந்து வெளியே வா" என்று சொன்னார். உடனே __ பிசாசு அவளை விட்டுப்புறப்பட்டது.
  • 49:2 அவர் தண்ணீரின்மேல் நடந்தார், புயல்காற்றை அமைதிப்படுத்தினார், பல நோய்களைக் குணமாக்கினார், பிசாசுகளைத் துரத்தினார், இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார், ஐந்துஅப்பங்களையும் இரண்டு சிறிய மீன்களையும். 5,000 பேருக்குப் பகிர்ந்து கொடுத்தார்.

சொல் தரவு:

  • Strong's: H2932, H7307, H7451, H7700, G169, G1139, G1140, G1141, G1142, G4190, G4151, G4152, G4189