ta_tw/bible/kt/clean.md

9.9 KiB

சுத்தம், சுத்தம் செய்கிறான், சுத்தம் செய்யப்பட, சுத்தம் செய், சுத்திகரிக்கப்பட்ட, தூய்மை, சுத்தம், கழுவு, கழுவுதல், கழுவப்பட்ட, தூய்மையற்ற

வரையறை:

"சுத்தமாக" என்ற சொல்லின் அர்த்தம் எந்த அழுக்கு அல்லது கறை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாகும். வேதாகமத்தில், "தூய," "பரிசுத்த," அல்லது "பாவத்திலிருந்து விடுதலையாக்கப்படுவது" என்ற அர்த்தத்தில் இது பெரும்பாலும் உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

  • "சுத்தமாக்குதல்" என்பது ஏதாவது ஒன்றை "சுத்தமாக மாற்றும்" செயலாகும். இது "கழுவு" அல்லது "சுத்திகரி" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • பழைய ஏற்பாட்டில், தேவன் இஸ்ரவேல் மக்களிடம் சடங்காச்சாரமாக "சுத்தமான "மிருகங்கள் எவைகள் என்றும், "அசுத்தமான மிருகங்கள்" எவைகள் என்றும் குறிப்பிட்டார். சுத்தமான விலங்குகள் மட்டுமே சாப்பிட அல்லது பலிசெலுத்துவதற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இந்த சூழலில், "சுத்தமாக" என்ற வார்த்தையின் அர்த்தம், மிருகமானது பலிசெலுத்துவதற்கு தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று பொருளாகும்.
  • சில தோல் நோய்களைக் கொண்ட ஒருவன் அந்த நோய் தோற்று நோயாக இராமல் முற்றிலும் சுகமாகும்வரை அசுத்தமானவனாக இருப்பான். தோலை சுத்தப்படுத்துவதற்கான வழிமுறைகள் அந்த நபருக்கு தோலை சுத்தப்படுத்துவதற்கான வழிமுறைகள் அந்த நபருக்கு மீண்டும் "சுத்தமாக" அறிவிக்கப்பட வேண்டும். மீண்டும் "சுத்தமாக" அறிவிக்கப்பட வேண்டும்.
  • சிலசமயங்களில் "சுத்தமானது" ஒழுக்கநெறி தூய்மையாக இருப்பதை உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

வேதாகமத்தில், "அசுத்தம்" என்ற வார்த்தையானது, தம் மக்கள் தொடுவதற்கு, சாப்பிடுவதற்கு அல்லது பலி செலுத்துவதற்குத் தகுதியற்றவைகள் என்று தேவன் அறிவித்த பொருட்களை குறிப்பதற்கு உருவக அர்த்தத்தில் பயன்படுதப்படுகிறது.

  • எந்தவொரு மிருகங்கள் சுத்தமானவை' என்றும் எந்தவொரு மிருகங்கள் தீட்டானது' என்றும் இஸ்ரவேல் மக்களுக்கு அறிவுரை கொடுத்தார். அசுத்தமான விலங்குகளை சாப்பிட அல்லது தியாகம் பயன்படுத்த இஸ்ரவேல் மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
  • சில தோல் வியாதிகளைக் கொண்டவர்கள் குணமடையும்வரை "தீட்டாக" இருப்பதாக கூறப்பட்டது.
  • இஸ்ரவேலர் "தீட்டான" ஒன்றைத் தொட்டிருந்தால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தீட்டாக கருதப்படுவார்கள்.
  • அசுத்தமான காரியங்களைத் தொடாமலும் உண்ணாமலும் தேவனுடையடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது, தேவனுடைய ஊழியத்திற்காக இஸ்ரவேலரை பிரித்தெடுத்தது.
  • இந்த உடல் மற்றும் சடங்காச்சாரமான அசுத்தமானது ஒழுக்கமற்ற அசுத்தத்திற்கு அடையாளமாக இருந்தது.
  • மற்றொரு உருவக அர்த்தத்தில், "அசுத்த ஆவி "என்பது ஒரு தீய ஆவியைக் குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த சொல்லை "சுத்தமான" அல்லது "தூய" (அழுக்கு அல்ல என்ற அர்த்தத்தில்) என்ற பொதுவான வார்த்தையுடன் மொழிபெயர்க்க முடியும்.

  • மொழிபெயர்ப்பதற்கான மற்ற வழிகள், " சடங்காச்சாரமான தூய்மை" அல்லது "தேவனுக்கு ஏற்கத்தக்கவை" ஆகியவை அடங்கும்.

  • "சுத்தப்படுத்துதல்" என்பது "கழுவுதல்" அல்லது "தூய்மைப்படுத்துதல்" என்பதன் மூலம் மொழிபெயர்க்கப்படலாம்.

  • "சுத்தமான" மற்றும் "சுத்தப்படுத்தும்" வார்த்தைகளை உருவக அர்த்தத்தில் புரிந்துகொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • "அசுத்தமான என்ற" வார்த்தை "சுத்தமில்லாதது" அல்லது "தேவனுடைய பார்வையில் தகுதியற்றது" அல்லது "உடல் ரீதியாக அசுத்தமானது" அல்லது "தீட்டுப்பட்டவர்" என மொழிபெயர்க்கப்படலாம்.

  • ஒரு பிசாசை அசுத்த ஆவி எனக் குறிப்பிடும்போது, அசுத்தமான என்பது , "அசுத்தமான" என்பது "தீமை" அல்லது "தீட்டப்பட்டதாக" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

  • இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பு ஆன்மீக அசுத்தத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். தொடுதல், சாப்பிடுதல் அல்லது பலி செலுத்துவதற்கு தகுதியற்றது என தேவன் அறிவித்த எதையும் அது குறிக்கலாம்.

(மேலும் காண்க: தீட்டு, பிசாசு, பரிசுத்த, பலி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1249, H1252, H1305, H2134, H2135, H2141, H2398, H2548, H2834, H2889, H2890, H2891, H2893, H2930, H2931, H2932, H3001, H3722, H5079, H5352, H5355, H5356, H6172, H6565, H6663, H6945, H7137, H8552, H8562, G167, G169, G2511, G2512, G2513, G2839, G2840, G3394, G3689