ta_tw/bible/kt/demonpossessed.md

4.0 KiB
Raw Permalink Blame History

பிசாசு பிடித்திருக்கிற

வரையறை:

பிசாசினால் பிடிக்கப்பட்ட ஒரு நபர் அவர் செய்கிற மற்றும் சிந்திக்கிற காரியங்களை கட்டுப்படுத்துகிற ஒரு பிசாசு அல்லது தீய சக்தியைக் கொண்டிருக்கிறார்.

  • ஒரு பிசாசு பிடித்தவன் தன்னைத் தானே அல்லது பிற மக்களை காயப்படுத்துகிறான், ஏனென்றால் அந்தப் பிசாசு அதைச் செய்ய அவனைத் தூண்டுகிறது.
  • பிசாசுகளை விட்டு வெளியே வரும்படி இயேசு கட்டளையிட்டதன் மூலம் பிசாசு பிடித்தவர்களை இயேசு குணப்படுத்தினார். இது பெரும்பாலும் பிசாசுகளை "துரத்தியது" என்று அழைக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த வார்த்தை மொழிபெயர்க்க மற்ற வழிகளில் "பிசாசினால் கட்டுப்படுத்தப்படுதல்" அல்லது "ஒரு தீய ஆவியினால் கட்டுப்படுத்தப்படும்" அல்லது "உள்ளே ஒரு தீய ஆவி இருப்பது. என்று மொழிபெயர்க்கலாம்"

(மேலும் காண்க: பிசாசு)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 26:9 _பிசாசினால் பிடிக்கப்பட்ட பல மக்கள் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டார்கள்.
  • 32:2 அவர்கள் ஏரியின் மறுபக்கத்தை அடைந்த போது, __பிசாசுபிடிக்கப்பட்டவர்- இயேசுவை நோக்கி ஓடி வந்தார்__.
  • 32:6 பிசாசு பிடித்திருந்த _அந்த மனிதன் உரத்த சத்தத்துடன் “உன்னதமான தேவனுடைய குமாரனாகிய இயேசுவே, உமக்கும் எனக்கும் என்ன” என்று கூறினான். என்னை சித்திரவதை செய்யாதே! "
  • 32:9 அந்த ஊரிலிருந்து வந்தவர்கள் பிசாசுபிடித்திருந்த மனிதனைக் கண்டார்கள்.
  • 47:3 அவர்கள் (பவுல் மற்றும் சீலா) ஒவ்வொரு நாளிலும் நடந்து செல்லும்போது, பிசாசுபிடித்திருந்த ஒரு அடிமைப் பெண் அவர்களைப் பின்தொடர்ந்தாள்.

சொல் தரவு:

  • Strong's: G1139