ta_tw/bible/other/wheat.md

2.8 KiB

கோதுமை

விளக்கங்கள்

கோதுமையானது மனிதர்கள் உணவுக்காக வளர்க்கும் தானியங்களில் ஒரு வகையாகும். வேதாகமமானது “தானியம்” அல்லது “விதைகள்” என்று குறிப்பிடும்பொழுதெல்லாம் அது பொதுவாக கோதுமை தானியத்தையோ அல்லது கோதுமை விதைகளையே குறிப்பிடுகிறது.

  • கோதுமை விதைகள் அல்லது தானியங்கள், கோதுமைச் செடியின் மேல் பகுதியில் வளருகின்றன.
  • கோதுமை அறுவடை செய்யப்பட்டபிறகு, போரடிப்பதன்மூலமாக தாவரத்தின் தாளிலிருந்து தானியம் பிரித்தெடுக்கப்படுகிறது. கோதுமைச் செடியின் தாள், “வைக்கோல்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் மிருகங்கள் அதன்மீது தூங்குவதற்காக தரையின் மீது போடப்படுகிறது.
  • போரடித்தபிறகு, தானியத்தைச் சுற்றியுள்ள பதரை தூற்றுவதன்மூலம் பிரித்து, பதரானது வெளியே கொட்டப்படுகிறது.
  • மக்கள் கோதுமைத் தானியத்தை மாவாக அரைத்து, அதை அப்பம் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

(மேலும் பார்க்க: வார்க்கோதுமை, பதர், தானியம், விதை, போரடித்தல், தூற்றுதல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1250, H2406, G4621