ta_tw/bible/other/winnow.md

4.4 KiB

தூற்று, தூற்றுகிறான், தூற்றப்பட்ட, தூற்றுதல், சலித்து எடு, சலித்தல்

விளக்கங்கள்

”தூற்று” மற்றும் “சலி” என்ற பதங்களுக்கு தேவையற்ற பகுதிகளிலிருந்து தானியத்தைப் பிரித்தெடுத்தல் என்று அர்த்தம். வேதாகமத்தில்,இரண்டு வார்த்தைகளுமே, மக்களைப் பிரிப்பதற்காக அல்லது பகுப்பதற்காக உருவகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

  • ”தூற்றுதல்” என்றால் பதரையும் தானியத்தையும் ஒன்றாக காற்றில் தூற்றி, காற்றானது பதரைப் பறக்கச்செய்து, இவ்விதமாக தேவையற்ற பகுதிகளிலிருந்து தானியத்தைப் பிரித்தெடுத்தல் என்று அர்த்தம்.
  • “சலி” என்ற வார்த்தையானது, தூற்றப்பட்ட தானியத்தை, சல்லடையில் போட்டு சிறு கற்கள் மற்றும் தூசுகள் ஆகியவற்றை நீக்குதலைக் குறிக்கிறது..
  • பழைய ஏற்பாட்டில், “தூற்று” மற்றும் “சலி” ஆகியன, நீதிமான்களை அநீதியுள்ள மக்களிடமிருந்து பிரிக்கும் வாழ்க்கைப் போராட்டங்களுக்காக உருவகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • இயேசுவும் “சலித்தல்” வார்த்தையை, சீமான் பேதுருவும் மற்ற சீஷர்களும் தங்களுடைய விசுவாசத்திற்காக எவ்வாறு சோதிக்கப்படுவார்கள் என்று கூறும்போது உருவகமாகப் பயன்படுத்தினார்.
  • இந்தப்பதங்களை மொழிபெயர்ப்பதற்கு, இந்த செயல்பாடுகளைக் குறிக்கிற இந்தத் திட்டத்தின் மொழியின் வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை பயன்படுத்தவும். “அசைத்தல்” அல்லது “விசிறி வீசுதல்” என்பவை நல்ல மொழிபெயர்ப்புகள் ஆகும். தூற்றுதல் அல்லது சலித்தல் ஆகியவவை தெரியாதவைகளாக இருந்தால், தானியத்தைப் பதரிலிருந்து பிரிக்கிற வேறு முறைகளுக்குப் பயன்படுத்தப்படுகிற வார்த்தைகளை இவ்வார்த்தைகளை மொழிபெயர்ப்பதற்குப் பயன்படுத்தலாம்.

(மேலும் பார்க்க: தெரியாதவைகளை எவ்வாறு மொழிபெயர்ப்பது

(மேலும் பார்க்க: பதர், தானியம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2219, H5128, H5130, G4425, G4617