ta_tw/bible/other/overseer.md

4.3 KiB

கண்காணி, கண்காணிகள், மேற்பார்வை செய்தல், கண்காணி, மேற்பார்வை செய்பவர்

வரையறை:

"மேற்பார்வையாளர்" என்பது மற்றவர்களின் வேலை மற்றும் நலன்களைப் பொறுப்பாக கவனிக்கும் ஒரு நபரை குறிக்கிறது.

  • பழைய ஏற்பாட்டில், பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் வேலையை சரியாக செய்ததை உறுதிப்படுத்த வேண்டிய வேலை கண்காணிக்கு இருந்தது.
  • புதிய ஏற்பாட்டில், ஆரம்ப கால கிறிஸ்தவ தேவாலயத்தின் தலைவர்களை விவரிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. தேவாலயத்தின் ஆவிக்குரிய தேவைகளை கவனித்துக்கொள்வதன் மூலம் அவர்களுடைய விசுவாசம் துல்லியமான வேதாகமப் போதனைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.
  • "மந்தையாகிய" உள்ளூர் சபையிலிருந்த விசுவாசிகளை கவனித்துக்கொள்ளும் ஒரு மேய்ப்பரை ஒரு கண்காணியாக பவுல் குறிப்பிடுகிறார்.
  • மேய்ப்பனைப் போல கண்காணியானவர், மந்தையை காத்துக்கொள்வார். தவறான ஆவிக்குரிய போதனையிலும் மற்ற தீய செல்வாக்கிலிருந்தும் விசுவாசிகளை அவர் காத்துக்கொள்கிறார்.
  • புதிய ஏற்பாட்டில், "கண்காணிகள்", "மூப்பர்கள்", "மேய்ப்பர்கள் / போதகர்கள்" ஆகியோர் ஒரே ஆவிக்குரியத் தலைவர்களைப் பற்றி குறிப்பிடும் வெவ்வேறு வழிகளே.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • இந்த வார்த்தை மொழிபெயர்க்க மற்ற வழிகள் "மேற்பார்வையாளர்" அல்லது "கவனிப்பவர்" அல்லது "மேலாளர்."
  • தேவனுடைய மக்களுடைய உள்ளூர் குழுவின் தலைவரை குறிப்பிடும் போது, ​​இந்த வார்த்தை "ஆவிக்குரிய மேற்பார்வையாளர்" அல்லது "விசுவாசிகள் குழுவின் ஆவிக்குரிய தேவைகளை கவனித்துக் கொள்ளும் ஒருவர்" அல்லது "ஒருவர் சபையின் ஆவிக்குரிய தேவைகளை மேற்பார்வையிடுகிறது. "

(மேலும் காண்க: தேவாலயம், மூப்பர், போதகர், மேய்ப்பர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5329, H6485, H6496, H7860, H8104, G1983, G1984, G1985