ta_tw/bible/other/light.md

5.5 KiB

ஒளி, விளக்குகள், விளக்கு, மின்னல், பகல், சூரிய ஒளி, அந்தி, ஞானம், அறிவொளி

வரையறை:

வேதாகமத்தில் "ஒளி" என்ற சொல்லிற்கு பல அடையாள அர்த்தங்கள் உள்ளன. இது பெரும்பாலும் நீதியின், புனிதத்தன்மை, சத்தியத்திற்கான ஒரு உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. (பார்க்கவும்: உருவகம்

  • "உலகத்தின் ஒளி" என்று இயேசு சொன்னார், உலகிற்கு தேவனுடைய உண்மையான செய்தியை அவர் வெளிப்படுத்தி, பாவத்தின் இருளில் இருந்து மக்களை விடுவிக்கிறார்.
  • கிறிஸ்தவர்கள் "ஒளியில் நக்கட" வேண்டும் என்று கட்டளையிடப்படுகிறார்கள், அதாவது தேவன் அவர்களை விரும்புவதையும் தீமைகளைத் தவிர்ப்பதையும் விரும்புகிறார்.
  • "தேவன் ஒளியாக இருக்கிறார்" என்று அப்போஸ்தலன் யோவான் குறிப்பிட்டார், அவருக்குள் இருள் இல்லை.
  • ஒளி மற்றும் இருள் முற்றிலும் எதிரிடையானவை. அனைத்து ஒளி இல்லாதது இருள்.
  • "உலகத்தின் ஒளி" என்றும், தம்மைப் பின்பற்றுகிறவர்கள், தேவனுடைய மகத்துவத்தை தெளிவாக விளக்கும் விதத்தில் வாழ்வதன் மூலம் உலகில் விளக்குகளைப்போல் பிரகாசிக்க வேண்டும் என்றும் இயேசு சொன்னார்.
  • "ஒளியில் நடவுங்கள்" என்பது தேவனுக்குப் பிரியமான விதத்தில் வாழ்வதாகும்; இருளில் நடந்து தேவனுக்கு விரோதமாக கலகம் செய்கிறவர்கள், தீய காரியங்களைச் செய்கிறார்கள்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • மொழிபெயர்க்கும்போது, ​​அவைகள் உருவகமாகபயன்படுத்தப்படும் போது கூட "ஒளி" மற்றும் "இருள்" என்ற வார்த்தைகளை வைத்து மொழிபெயர்ப்பதுமுக்கியம்.
  • உரையில் ஒப்பீடு விளக்க வேண்டிய அவசியம் இருக்க வேண்டும். உதாரணமாக, "ஒளியின் பிள்ளைகளாக நடக்க வேண்டும்" என்பதை "பிரகாசமான சூரிய ஒளியில் நடக்கும் ஒருவர் போல் வெளிப்படையாக நீதியுள்ள வாழ்வை வாழ வேண்டும்."என மொழிபெயர்க்கலாம்,
  • "ஒளி" என்ற மொழிபெயர்ப்பு ஒரு விளக்கு போன்ற ஒளியைக் கொடுக்கும் ஒரு பொருளைக் குறிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த வார்த்தைகளின் மொழிபெயர்ப்பானது ஒளியைக் குறிக்க வேண்டும்.

(மேலும் காண்க: இருள், பரிசுத்த, நீதிமான், உண்மை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H216, H217, H3313, H3974, H4237, H5051, H5094, H5105, H5216, H6348, H7052, H7837, G681, G796, G1645, G2985, G3088, G5338, G5457, G5458, G5460, G5462