ta_tw/bible/other/confidence.md

5.0 KiB

திடநம்பிக்கை, திடநம்பிக்கை கொள்ளுதல், நம்பிக்கையுடன்

வரையறை:

"திடநம்பிக்கை" என்ற சொல், ஏதாவது ஒன்று உண்மை அல்லது நிச்சயம் நிகழும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

  • வேதாகமத்தில், "நம்பிக்கை" என்ற வார்த்தையின் அர்த்தம் ஒரு காரியம் நிச்சயமாய் நிகழும் என்று எதிர்பார்ப்போடு காத்திருப்பதைக் குறிக்கிறது. ULB பெரும்பாலும் இது "நம்பிக்கை" அல்லது "எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கை" அல்லது "எதிர்கால நம்பிக்கை" என மொழிபெயர்க்கிறது, குறிப்பாக இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு தேவன் வாக்குறுதி அளித்த வாக்குறுதியை பெற்றுக்கொள்வது உறுதி என்று பொருள்படுவதைக் குறிக்கிறது.
  • " திடநம்பிக்கை " என்ற வார்த்தை பெரும்பாலும் இயேசுவில் உள்ள விசுவாசிகள் ஒருநாளில் பரலோகத்தில் என்றென்றும் தேவனோடு இருப்போம் என்பதில் நம்பிக்கைகொள்வதைக் குறிக்கிறது.
  • "தேவன் மீது நம்பிக்கை வைத்திருப்பது" என்ற சொற்றொடர், என்பது தேவன் வாக்குத்தத்தம் செய்ததை முழுமையாகப் பெறுவதையும் அனுபவிப்பதையும் முழுமையாக எதிர்பார்ப்பதை குறிப்பதாகும்.
  • "நம்பிக்கையுடனே" இருப்பது என்பது தேவனுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதும், அவர் சொன்னதை செய்வார் என்பதில் உறுதியோடு செயல்படுவதுமாகும். தைரியமாகவும், துணிச்சலுடனும் செயல்பட வேண்டும் என்ற அர்த்தத்தை இந்த வார்த்தை கொண்டுள்ளது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "நம்பிக்கை" என்ற வார்த்தை "உத்தரவாதம்" அல்லது "மிகவும் உறுதியாக" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • நம்பிக்கையுடன்" இருத்தல் என்ற சொற்றொடரை மேலும் " முழுமையாக நம்பிக்கைகொள்ளுதல் " அல்லது "முற்றிலும் உறுதியாக இருத்தல்" அல்லது "நிச்சயம் தெரியும்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "நம்பிக்கையுடன்" என்ற வார்த்தையை "தைரியமாக" அல்லது "உறுதியுடன்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • சூழலை பொறுத்து, "நம்பிக்கையை" மொழிபெயர்ப்பதற்கான வழிகள், "முழுமையான உத்தரவாதம்" அல்லது "நிச்சயமான எதிர்பார்ப்பு" அல்லது "உறுதியானது" ஆகியவை அடங்கும்.

(மேலும் காண்க: விசுவாசம், நம்பிக்கை, தைரியமான, [விசுவாசம், நம்பிக்கை, நம்பியிருத்தல்)

வேதாகமக் குறிப்புகள்:

{{topic>confidence&nocomments}}

சொல் தரவு:

  • Strong's: H982, H983, H985, H986, H3689, H3690, H4009, G1340, G2292, G3954, G3982, G4006, G5287