ta_tw/bible/kt/faithful.md

11 KiB
Raw Permalink Blame History

உண்மை, உண்மைத்துவம், உண்மையில்லாத, உண்மையற்றநிலை

வரையறை:

தேவனுக்கு "உண்மையுள்ளவர்களாக" இருக்க வேண்டுமென்பது, தேவனுடைய போதனைகளின்படி தொடர்ந்து வாழ்வதையே அர்த்தப்படுத்துகிறது. அவருக்கு கீழ்ப்படிவதன் மூலம் அவருக்கு விசுவாசமாக இருப்போம். விசுவாசமாக இருப்பது நிலை அல்லது நிலை "உண்மைத்துவம் ஆகும்"

உண்மையுள்ள ஒருவர், எப்போதும் அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் மற்றவர்களுடைய பொறுப்புகளை எப்போதும் நிறைவேற்றவும் நம்பகமானவர்.

  • உண்மையுள்ள ஒருவர் ஒரு வேலையைச் செய்வதில் அது நீண்டதும் கஷ்டமாக இருந்தாலும் கூட சகித்துக்கொள்கிறார்,.
  • தேவனுக்கு உண்மையானவராக இருத்தல் என்பது நாம் என்ன செய்யவேண்டுமென தேவன் விரும்புகிறாரோ அதை தொடர்ந்து செய்வதாகும்.

"விசுவாசமில்லாத" என்ற வார்த்தை, தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி செய்யாததை விவரிக்கிறது. “உண்மையற்ற” என்றவார்த்தை விசுவாசமற்ற என்பதின் நிலை அல்லது நடைமுறை ஆகும் ""

  • இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களை வணங்க ஆரம்பித்தபோது, " உண்மையற்றவர்கள்" என்று அழைக்கப்பட்டார்கள், மற்ற வழிகளில் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்.
  • திருமண வாழ்வில், விபச்சாரத்தைச் செய்கிற ஒருவர் தன்னுடைய மனைவிக்கு " உண்மையற்ற வராக இருக்கிறார்".
  • இஸ்ரவேலின் கீழ்ப்படியாத நடத்தைகளை விவரிப்பதற்கு கடவுள் "விசுவாசமற்ற" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை அல்லது அவரை மதிக்கவில்லை.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • பல சந்தர்ப்பங்களில், "உண்மையுள்ள" என்பது "நேர்மை" அல்லது "அர்ப்பணிப்பு" அல்லது "நம்பகமானவர்" என்று மொழிபெயர்க்கலாம்.

  • பிற சூழல்களில், "உண்மையுள்ள" என்பது"விசுவாசத்தைத் தொடர்வது" அல்லது "விசுவாசத்தோடும் கீழ்ப்படிவதற்கும் தேவனுக்குக் கீழ்ப்படிதல்" என்ற ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரால் மொழிபெயர்க்கலாம்.

  • "உண்மை" என்பதைமொழிபெயர்க்கப்படக்கூடிய வழிகள் "விசுவாசத்தில் விடாப்பிடியாக" அல்லது "நேர்மையாக இருத்தல்" அல்லது "நம்பகத்தன்மை" அல்லது "விசுவாசம் மற்றும் விசுவாசித்துக் கீழ்ப்படிதல்" ஆகியவை அடங்கும்.

  • சூழ்நிலையைப் பொறுத்து, "விசுவாசமற்றவன் என்பதை" "விசுவாசமற்றவன்" அல்லது "கீழ்ப்படியாதவன்" அல்லது "விசுவாசமுள்ளவன் அல்ல" என மொழிபெயர்க்கலாம்.

  • "விசுவாசமற்றவர்கள்" என்ற வார்த்தை "தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள்" அல்லது "விசுவாசமற்றவர்கள்" அல்லது "தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள்" அல்லது "தேவனுக்கு விரோதமாக கிளர்ச்சி செய்கிறவர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

  • "உண்மையற்ற" என்ற வார்த்தை "கீழ்ப்படியாமை" அல்லது "நேர்மையற்றது" அல்லது "நம்பாத அல்லது கீழ்ப்படியாத" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

  • சில மொழிகளில், "விசுவாசமற்றது" என்ற வார்த்தை "அவிசுவாசம்" என்ற சொல்லுடன் தொடர்புடையது.

(மேலும் காண்க: விபச்சாரம், நம்பிக்கை, கீழ்ப்படியாமை, விசுவாசம், விசுவாசம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 8:5 கூட சிறையில், யோசேப்பு தேவனுக்க விசுவாசமாக இருந்தார், தேவன் அவரை ஆசீர்வதித்தார்.
  • 14:12 அவ்வாறே, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு தேவன் கொடுத்த வாக்குறுதிகளில் இன்னும் அவர் உண்மையுள்ளவராக இருந்தார்.
  • 15:13 ஜனங்கள் தொடர்ந்து தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கப்போவதாகவும் அவருடைய கட்டளைகளின்படி நடப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தனர்.
  • 17:9 தாவீது நீதியுடனும் உண்மையுடனும் பல ஆண்டுகள் ஆட்சிசெய்தார், தேவன் அவரை ஆசீர்வதித்தார். ஆயினும், அவரது வாழ்நாள் முடிவில் அவர் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தார்.
  • 18:4 தேவன் சாலொமோன்மீது கோபமாக இருந்தார், சாலொமோனின் உண்மையற்ற தன்மைக்கான தண்டனையாக, சாலொமோன் மரணத்திற்குப்பின் இஸ்ரவேல் தேசத்தை இரண்டு ராஜ்யங்களாக பிரிப்பார் என்று அவர் கூறினார்.
  • 35:12”மூத்த மகன் தன தகப்பனாரிடம் , “இத்தனை ஆண்டுகள் நான் உமக்கு உண்மையாக வேலை செய்தேன்” என்று கூறினான்.
  • 49:17 ஆனால் நீ உனது பாவங்களை அறிக்கையிட்டால் அவர் உன்னை மன்னிப்பார், மேலும் தேவன் உண்மையுள்ளவராக” இருக்கிறார்.
  • 50:4 நீ எனக்கு முடிவுபரியந்தம் உண்மையாக இருந்தால், தேவன் உன்னை இரட்சிப்பார்”

சொல் தரவு:

  • Strong's: H529, H530, H539, H540, H571, H898, H2181, H4603, H4604, H4820, G569, G571, G4103