ta_tw/bible/kt/adultery.md

6.3 KiB

விபச்சாரம், தவறான உறவு, விபசாரக்காரன், விபச்சாரக்காரி, விபசாரக்காரர்கள், விபச்சாரிக்காரிகள்

விளக்கங்கள்:

“விபச்சாரம்” என்பது ஒரு திருமணமானவர் அவருடைய மனைவியில்லாத ஒருவரிடம் திருமண உறவு வைத்துகொள்ளுவது என்ற பாவத்தை செய்வதாகும். விபசாரத்தில் ஈடுபட்ட இருவரும் குற்றவாளிகள் “தவறான உறவு” என்ற வார்த்தையை இந்த தகாத உறவில் ஈடுபடும் நபரையோ அல்லது அத்தகைய குணத்தையோ விவரிக்கும்

“விபசாரக்காரன்” என்ற வார்த்தை பொதுவாக விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களை குறிக்கும். சிலநேரங்களில் “விபச்சாரி” என்ற வார்த்தை விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்னைக்குறிக்கும். விபச்சாரம் என்பது கணவனும் மனைவியும் திருமணத்தில் ஏற்படுத்தின உடன்படிக்கையையும், வாக்குறுதியையும் மீருவதாகும். விபச்சாரம் செய்யக்கூடாது இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் கட்டளையிட்டார். “தவறான உறவு” என்ற வார்த்தையை உருவகப்படுத்தி பேசும்போது, இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு உண்மையில்லா நிலைமையை, குறிப்பாக பொய்யான தெய்வங்களை அவர்கள் வணங்கியபோது என்று விவரிக்கலாம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

நாம் குறிப்பிடும் மொழியில் “விபச்சாரம்” என்ற வார்த்தையில்லையெனில், இந்த வார்த்தை “மற்றொருவரின் மனைவியோடு தகாத உறவுக்கொள்ளல்” அல்லது “இன்னொருவரின் துணையோடு நெருங்கி இருத்தல்” என்ற வாக்கியங்களை பயன்படுத்தலாம். சில மொழிகளில் விபச்சாரத்தை, “இன்னொருவரின் துணையோடு உறங்குதல்” அல்லது “ஒருவரின் மனைவிக்கு உண்மையாக வாழவில்லை” என்று பேசுவார்கள். “தவறான உறவு” என்ற உருவகம், நேரிடையாக மொழிப்பெயர்க்க வேண்டுமெனில் தேவனுக்கு கீழ்படியாமல் வாழுகின்ற மக்களை மற்றவர்களின் வாழ்க்கை துணையோடு உண்மையில்லாமல் வாழ்பவர்களுக்கு ஒப்பிடலாம். இது குறிப்பிட்ட மொழியில் தெளிவாக சொல்லப்படவில்லையெனில், உருவக மொழியில் “தவறான உறவு” என்பதை “உண்மையற்ற தன்மை” அல்லது “ஒழுக்கக்கேடான” அல்லது “வாழ்க்கை துணைக்கு உண்மையில்லாமல் இருப்பதைப்போல” என்று மொழிப்பெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: ஒப்படைத்தல், உடன்படிக்கை, வேசித்தனம், பிறருடன் தவறான உறவு வைத்தல், உண்மையான).

வேத குறிப்புகள்:

வேத கதைகளிலிருந்து உதாரணங்கள்:

  • 13:6 விபச்சாரம் செய்யாதே
  • 28:2 விபச்சாரம் செய்யாதே
  • 34:7 மதத்தலைவன் இவ்விதமாக ஜெபித்தான். “ஆண்டவரே நான் மற்ற மனிதர்களைப் போல ஒரு பாவியாகவோ அல்லது ஒரு திருடனாகவோ, அநியாயக்காரனாகவோ, விபச்சாரக்காரனாகவோ, இந்த வரி பிரிக்கிறவனைப் போலவோ இல்லாததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்றான்.

சொல் தரவு:

  • Strong's: H5003, H5004, G3428, G3429, G3430, G3431, G3432