ta_tw/bible/other/chronicles.md

2.8 KiB

நாளாகமம்

வரையறை:

கால "நாளாகமம்" என்பது ஒரு காலப்பகுதியில் நிகழ்வுகளின் எழுதப்பட்ட பதிவை குறிக்கிறது.

  • இரண்டு பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் " முதல் நாளாகம புத்தகம்" என்றும், "இரண்டாம் நாளாகம புத்தகம் " என்றும் அழைக்கப்படுகின்றன.
  • ஆதாமிலிருந்து ஒவ்வொரு தலைமுறையினரிலும் மக்களின் பட்டியலைத் தொடங்கி, இஸ்ரவேல் மக்களின் வரலாற்றின் பதிவு செய்யப்பட்டப் பகுதி "நாளாகமம்"என்று அழைக்கப்படுகிறது.
  • "நாளாகமத்தின் முதல் புத்தகம்" சவுல் ராஜாவின் முடிவையும் தாவீது ராஜாவின் அரசாட்சியின் நிகழ்வுகளையும் பதிவு செய்கிறது.
  • "நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம்" சாலொமோன் ராஜாவையும், மற்ற ராஜாக்களையும், தேவாலயத்தை கட்டுவதையும், இஸ்ரவேல் இராஜ்ஜியமானது தெற்கு ராஜ்யம் மற்றும் வடக்கு ராஜ்யம் என்று பிரிக்கப்படுவதையும் பதிவு செய்கிறது.
  • பாபிலோனிய சிறையிருப்பின் ஆரம்பத்தைக்குறித்து 2 நாளாகமத்தின் நிறைவுப் பகுதி விவரிக்கிறது.

(மேலும் காண்க: பாபிலோன், தாவீது, சிறையிருப்பு, இஸ்ரவேல் இராஜ்ஜியம், யூதா, சாலொமோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1697