ta_tw/bible/other/armor.md

3.4 KiB

போர்க்கவசம், போராயுதம்

விளக்கம்Definition:

“போர்க்கவசம்” என்ற பதம் ஒரு இராணுவ வீரன் யுத்தத்தில் எதிரியோடு சண்டையிடவும் அத்துடன் எதிரியின் தாக்குதலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுத்தும் ஒரு ஆயதமாகும். இது உருவகப்படுத்தி ஆவிக்குரிய ஆயுதமாகவும் குறிப்பிடப்படுகிறது.

  • இராணுவ வீரனின் மற்ற ஆயுதங்கள் தலைச்சீரா, கேடையம், மார்க்கவசம், கால் மறைப்பு, மற்றும் வாள் போன்றவை.
  • இவ்வார்த்தையை உருவகமாக பயன்படுத்தி, அபோஸ்தலனாகிய பவுல் சரீரத்திற்கு உபயோகிக்கும் ஆயுதங்களை ஆவிக்குரிய ஆயுதங்களுக்கு ஒப்பிட்டு, அவைகளை தேவன் தமது விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய யுத்தங்களை மேற்கொள்வதற்கு அளிப்பதாக கூறுகிறார்.
  • ஆவிக்குரிய ஆயுதங்களை தேவன் கொடுத்து தமது பிள்ளைகளை பாவம் மற்றும் சாத்தானை யுத்தம் செய்து மேற்கொண்டு, சத்தியம், நீதி, சுவிஷேச சமாதானம், விசுவாசம், இரட்சிப்பு, மற்றும் பரிசுத்த ஆவியை சுதந்ததிருத்துக்கொள்ள ஆலோசனை கூறுகிறார்..
  • இப்பதம் “இராணுவ வீரனின் கவசம்” அல்லது யுத்தத்தில் பாதுகாக்கும் உடை” அல்லது “பாதுகாக்கும் சரீர கவசங்கள்” அல்லது “ஆயதங்கள்” என்றும் அர்த்தப்படுத்தலாம்.

(மேலும் பார்க்க: விசுவாசம், பரிசுத்த ஆவி, சமாதானம், இரட்சிப்பு, ஆவி)

வேத விளக்கங்கள்:

சொல் தரவு:

  • Strong's: H2185, H2290, H2488, H3627, H4055, H5402, G3696, G3833