ta_tw/bible/names/zadok.md

2.5 KiB

சாதோக்கு

உண்மைகள்:

சாதோக்கு என்பது, இராஜாவாகிய தாவீதின் ஆட்சிக்காலத்தில் இருந்த முக்கியமான பிரதான ஆசாரியனுடைய பெயராகும்.

  • அப்சலோம் இராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாக கலகம் செய்தபோது, சாதோக்கு தாவீதுக்கு ஆதரவாக இருந்து, உடன்படிக்கைப்பெட்டியை எருசலேமுக்குத் திரும்பவும் கொண்டுவருவதற்கு உதவிசெய்தான்.
  • பல வருடங்களுக்குப் பிறகு, தாவீதின் மகனாகிய சாலொமோனை இராஜாவாக அபிஷேகிக்கும் விழாவில் பங்குபெற்றான்.
  • சாதோக்கு என்ற பெயரில் இரண்டு வித்தியாசமான மனிதர்கள், நெகேமியாவின் நாட்களில் எருசலேமின் சுவர்களை மீண்டும் கட்டியெழுப்ப உதவினார்கள்.
  • இராஜாவாகிய யோதாமின் தாத்தாவுடைய பெயரும் சாதோக்கு என்பதாகும்.

(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்ப்பது

(மேலும் பார்க்க: உடன்படிக்கைப்பெட்டி, தாவீது, யோதாம், நெகேமியா, அரசாட்சி, சாலொமோன்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6659, G4524