ta_tw/bible/names/jotham.md

2.3 KiB

யோதாம்

வரையறை:

பழைய ஏற்பாட்டில், யோதாம் என்ற பெயரில் மூன்று ஆண்கள் இருந்தனர்.

யோதாம் என்னும் ஒரு மனிதன் கிதியோனின் இளைய மகன். யோதாம் தன்னுடைய மூத்த சகோதரனாகிய அபிமெலேக்கைத் தோற்கடித்து, மற்ற சகோதரர்கள் அனைவரையும் கொன்றான். யோதாம் என்னும் மற்றொரு மனிதன், தன் தந்தை உசியா (அசரியா) இறந்தபின், பதினாறாம் வயதில் ராஜாவாக இருந்தான்.

  • தன் தகப்பனைப் போல் யோதாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து நல்ல ராஜாவாக இருந்தார்.
  • ஆனால், விக்கிரக வணக்கத்தின் இடங்களை அகற்றாமல் இருந்ததால் அவர் யூதாவின் மக்களை மீண்டும் தேவனிடமிருந்து விலக்கி வைத்தார்.

மத்தேயு புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியைச் சேர்ந்த மூதாதையர்களில் ஒருவரான யோதாம் ஆவார்.

(மேலும் காண்க: அபிமெலேக்கு, ஆகாஸ், கிதியோன், உசியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3147