ta_tw/bible/names/zacchaeus.md

2.1 KiB

சகேயு

உண்மைகள்:

திரளான மக்கள் கூட்டத்தால் சூழப்பட்டிருந்த இயேசுவைக் காண்பதற்காக மரத்தின் மேல் ஏறிய எரிகோவைச் சேர்ந்தவனாகிய சகேயு வரிவசூலிப்பவனாக இருந்தான்.

  • சகேயு இயேசுவில் விசுவாசம் வைத்தபோது முற்றிலும் மாற்றப்பட்டான்.
  • அவன் மக்களை ஏமாற்றிய பாவத்திலிருந்து மனம்திரும்பினான். மேலும் தன்னுடைய சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தான்.
  • மேலும் அவன் மக்களிடமிருந்து அதிகப்படியாக வசூலித்த வரிப்பணத்தை நான்கு மடங்காக அவர்களுக்குக் கொடுத்துவிடுவதாகவும் வாக்குறுதிகொடுத்தான்.

(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் பார்க்க: நம்பு, வாக்குறுதி, மனம்திரும்பு, பாவம், வரி, வரிவசூலிப்பவன்)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: G2195