ta_tw/bible/names/horeb.md

2.8 KiB

ஓரேப்

வரையறை:

ஓரேப் மலை என்பது சீனாய் மலையின் மற்றொரு பெயர் ஆகும், தேவன் பத்து கட்டளைகள் அடங்கிய கற்பலகைகளை மோசேயிடம் வழங்கினார்.

  • ஓரேப் மலை "தேவனுடைய பர்வதம்" என்று அழைக்கப்படுகிறது.
  • ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, ​​மோசே எரிகிற முட்செடியை ஓரேப் மலையில் பார்த்தார்.
  • இஸ்ரவேல் மக்களுக்கு அவர் கொடுத்த கட்டளைகளின்படி, இஸ்ரவேல் ஜனங்களிடம் அவர் தம்முடைய உடன்படிக்கையை வெளிப்படுத்திய இடம் ஓரேப் மலை.
  • பாலைவனத்தில் அலைந்து திரிந்துகொண்டிருந்த இஸ்ரவேலருக்கு தண்ணீர் கொடுப்பதற்காக ஒரு பாறையை அடிக்கும்படி தேவன் மோசேயிடம் சொன்ன இடம் ஓரேப் மலை ஆகும்.
  • இந்த மலையின் சரியான இடம் அறியப்படவில்லை, ஆனால் இப்போது சினாய் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் இது இருக்கலாம்.
  • " ஓரேப் மலையின் உண்மையான பெயர் "சீனாய் மலை" எனலாம். ஓரேப் மலை சீனாய் பாலைவனத்தில் அமைந்திருப்பதைக் குறிப்பிடுகிறது.

(மேலும் காண்க: உடன்படிக்கை, இஸ்ரேல், மோசே, சீனாய், பத்து கட்டளைகள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2722