ta_tw/bible/names/gath.md

2.8 KiB

காத், கித்தியன், கித்தியர்கள்

உண்மைகள்:

காத் பெலிஸ்தரின் ஐந்து முக்கிய நகரங்களில் ஒன்றாகும். அஸ்தோத், அஸ்கலோனின் கிழக்கே எக்ரோன் மற்றும் கிழக்கிற்கு வடக்கே அமைந்திருந்தது.

  • பெலிஸ்திய போர்வீரனான கோலியாத் காத் நகரத்திலிருந்து வந்தவன்.
  • சாமுவேலின் காலத்தில், பெலிஸ்தர் இஸ்ரவேலின் உடன்படிக்கைப் பெட்டியை கைப்பற்றி, அஸ்தோத்தில் தங்கள் புறஜாதி கோவிலுக்கு எடுத்துச் சென்றார்கள். பின்னர் அது காத் நகரிலும், பின்னர் எக்ரோன் நகரிலும் மாற்றப்பட்டது. ஆனால் அந்தப் பட்டணங்களின் ஜனங்களை தேவன் தண்டித்தார், அதனால் அதை அவர்கள் மீண்டும் இஸ்ரவேலுக்குத் திரும்ப அனுப்பினார்கள்.
  • தாவீது ராஜாவாகிய சவுலை விட்டு ஓடிப்போனபோது, ​​அவன் காத் பட்டணத்துக்கு ஓடிப்போய், தன் இரண்டு மனைவிகளோடுகூட நேர்மையாகப் பின்பற்றியவர்களாகிய அறுநூறுபேருடன் அங்கே குடியிருந்தான்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை மொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: அஸ்தோத், அஸ்கலோன், எக்ரோன், காசா, கோலியாத், பெலிஸ்தர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1661, H1663