ta_tw/bible/names/ekron.md

3.0 KiB

எக்ரோன், எக்ரோனியர்கள்

உண்மைகள்:

எக்ரோன் பெலிஸ்தினுடைய ஒரு பெரிய நகரமாக இருந்தது, இது மத்தியதரைக் கடலில் இருந்து 9 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.

  • பொய்யான கடவுளான பாகால்-சேபூலின் கோவில் எக்ரோனில் அமைந்துள்ளது.
  • பெலிஸ்தர் உடன்படிக்கைப் பெட்டியைக் கைப்பற்றியபோது, ​​அதை அஸ்தோத்துக்குக் கொண்டுபோய், காத், எக்ரோன் ஆகிய இடங்களுக்குக் கொண்டு சென்றார்கள்; ஏனென்றால், பேழை கொண்டுசெல்லப்பட்ட நகரத்தில் தேவன் ஜனங்களுக்கு நோய்களை கொடுத்து மரிக்கும்படி செய்தார். இறுதியில் பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு பேழையை மீண்டும் அனுப்பினர்.
  • அகசியா ராஜா வீட்டின் கூரையில் விழுந்து தன்னைக் காயப்படுத்திக்கொண்டபோது, ​​அவன் காயங்களிநிமித்தம் பிழைப்பாரா இல்லையா என எஸ்கோனின் பொய்யான தெய்வமாகிய பாகால்சேபூபின்மூலம் அறிந்துகொள்ள முயன்றான். இந்த பாவத்தின் காரணமாக, அவர் இறந்துவிடுவார் என்று கர்த்தர் சொன்னார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை மொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க : அசரியா, உடன்படிக்கைப் பெட்டி, அஸ்தோத், பெயெல்செபூல், பொய்யான கடவுள், காத், [பெலிஸ்தர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6138, H6139