ta_tw/bible/names/edom.md

3.5 KiB

ஏதோம், ஏதோமியன், ஏதோமியர், இதுமேயா

உண்மைகள்:

ஏசாவுக்கு ஏதோம் என்ற இன்னொரு பெயர் இருந்தது. அவர் வாழ்ந்த இடம் "ஏதோம்" என்றும் பின்னர் " இதுமேயா " என்றும் அழைக்கப்பட்டது. "ஏதோமியர்" அவருடைய சந்ததியினர் ஆவர்.

  • காலப்போக்கில் ஏதோமின் பகுதி மாற்றப்பட்டது. இது அனேகமாக இஸ்ரேலின் தெற்கே அமைந்திருந்தது, இறுதியில் தெற்கு யூதாவரை நீடித்திருந்தது.
  • புதிய ஏற்பாட்டு காலங்களில், ஏதோம் யூதேயா மாகாணத்தின் தென் பகுதியை உள்ளடக்கியிருந்தது. கிரேக்கர்கள் அதை " இதுமேயா " என்று அழைத்தனர்.
  • "ஏதோம்" என்ற பெயருக்கு "சிவப்பு" என்று அர்த்தம், இது ஏசா பிறந்தபோது அவன் சிவப்பு நிற உரோமத்துடன் மூடப்பட்டிருந்தான் என்ற உண்மையை குறிக்கலாம். அல்லது ஏசா தன் சேஷ்ட புத்திர பாகத்தை விற்பதற்கு பெற்றுக்கொண்ட சிவப்பு கூழைக் குறிக்கலாம்.
  • பழைய ஏற்பாட்டில், ஏதோம் நாடு அடிக்கடி இஸ்ரேலின் எதிரியாக குறிப்பிடப்படுகிறது.
  • ஒபதியாவின் முழு புத்தகமும் ஏதோமின் அழிவைப் பற்றியது. மற்ற பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் ஏதோமுக்கு எதிர்மறையான தீர்க்கதரிசனங்களைப் பேசினார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: விரோதி, சேஷ்ட புத்திர பாகம், ஏசா, ஒபதியா, தீர்க்கதரிசி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H123, H130, H8165, G2401