ta_tw/bible/names/bethel.md

3.7 KiB

பெத்தேல்

உண்மைகள்:

பெத்தேல் கானான் தேசத்தில் எருசலேமுக்கு வடக்கே அமைந்த நகரமாக இருந்தது. இது முன்பு "லூஸ்" என்று அழைக்கப்பட்டது.

  • முதன்முறையாக தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பெற்றபின், ஆபிராம் (ஆபிரகாம்) பெத்தேலுக்கு அருகில் தேவனுக்கு ஒரு பலிபீடம் கட்டினார். அந்த நகரின் உண்மையான பெயர் அந்த நேரத்தில் பெத்தேல் என்று இல்லை, ஆனால் அது பொதுவாக "பெத்தேல்" என அழைக்கப்பட்டது.
  • தன் சகோதரனாகிய ஏசாவினிடத்திலிருந்து தப்பி ஓடிப்போய், யாக்கோபு இந்த நகரத்துக்கு அருகில் இராத்திரியிலே தங்கி, அங்கே தரையில் நித்திரைசெய்தார். அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது, ​​தேவதூதர்கள்பரலோகத்திற்கு ஒரு ஏணியில் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருக்கிறதை கனவில் கண்டார்.
  • யாக்கோபு பெயரிடும் வரைக்கும் இந்த நகரத்திற்கு "பெத்தேல்" என்ற பெயர் இல்லை. இதை தெளிவாக்குவதற்கு, சில மொழிபெயர்ப்புகள் "ஆபிரகாமைப் பற்றிகூறப்பட்ட இடங்களில் லூஸ் ((பின்னர் பெத்தேல் என இது அழைக்கப்பட்ட) அதே சமயத்தில் யாக்கோபு முதலில் அங்கு வரும்போது ((அவர் பெயர் மாற்றப்படுவதற்கு முன்பு ") என மொழிபெயர்த்திருக்கலாம்
  • பழைய ஏற்பாட்டில் பெரும்பாலும் பெத்தேல் குறிப்பிடப்படுவதுடன், பல முக்கியமான சம்பவங்கள் நடந்த இடமாக இருந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்)

(மேலும் காண்க: ஆபிரகாம், பலிபீடம், யாக்கோபு, எருசலேம் )

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1008