ta_tw/bible/names/asaph.md

2.8 KiB

ஆசாப்

உண்மைகள்:

ஆசாப், லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆசாரியனாக இருந்தார், இராஜாவாகிய தாவீதிற்க்காக சங்கீதத்திற்கான இசையை இசையமைத்த திறமையுள்ள மனிதனாக இருந்தார்.. அவர் தனது சொந்த சங்கீதங்களையும் எழுதினார்.

தேவாலயத்தில் ஆராதனைக்கான பாடல்களை வழங்குவதற்கு பொறுப்பாளியாக இருந்த மூன்று இசைக்கலைஞர்களில் ஒருவராக தாவீது ராஜா ஆசாப்பை நியமித்தார். இந்த பாடல்களில் சில தீர்க்கதரிசனங்களாகும். ஆசாப் தனது மகன்களைப் பயிற்றுவித்தார், அவர்கள் இசைக் கருவிகளை வாசித்து, ஆலயத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்,.

  • சில இசைக்கருவிகளில் லுட், ஹார்ப், ட்ரம்பட் மற்றும் தம்புரு அடங்கும்.
  • சங்கீதம் 50 மற்றும் 73-83 ஆகியன ஆசாப் பாடியதாக சொல்லப்படுகிறது. இந்த சங்கீதங்களில் சில அவருடைய குடும்ப உறுப்பினர்களால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களைமொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: சந்ததி, ஹார்ப், லுட், தீர்க்கதரிசி, சங்கீதம், எக்காளம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H623