ta_tw/bible/kt/zion.md

3.2 KiB

சீயோன், சீயோன் மலை

விளக்கங்கள்

உண்மையில்,“சீயோன்” அல்லது “சீயோன் மலை” என்ற சொல், எபூசியர்களிடமிருந்து இராஜாவாகிய தாவீது கைப்பற்றிய கோட்டை அல்லது பாதுகாப்பான அரணைக் குறிக்கிறது. இந்த இரண்டு சொற்களும் இன்னொரு வகையில் எருசலேமைக் குறிப்பவைகளாக மாறின.

  • எருசலேம் நகரம் அமைந்துள்ள மலைகளில் இரண்டு மலைகள் சீயோன் மலை மற்றும் மோரியா மலை ஆகும். “சீயோன்”மற்றும் “சீயோன் மலை” என்ற சொற்கள் பின்னாட்களில், இந்த இரண்டு மலைகளையும், எருசலேம் நகரத்தையும் குறிப்பதற்காக பொதுவான சொற்களாக மாறின. சிலநேரங்களில் அவைகள், எருசலேமில் அமைந்துள்ள தேவாலயத்தையும் குறிக்கின்றன. (பார்க்க: ஆகுபெயர்)

தாவீது, சீயோன் அல்லது எருசலேமை “தாவீதின் நகரம்” என்று அழைத்தான். தாவீதின் நகரம் என்றும் அழைக்கப்பட்ட, தாவீதின் சொந்த ஊரான பெத்லகேமிலிருந்து இது வித்தியாசமானதாகும். “சீயோன்” என்னும் சொல், இஸ்ரவேல் அல்லது தேவனுடைய ஆவிக்குரிய இராஜ்ஜியம் அல்லது தேவன் உருவாக்கப்போகிற புதிய பரலோகமாகிய எருசலேமைக் குறிப்பதற்கு உருவகமாக பல வழிகளில் பயன்படுகிறது.

(மேலும் பார்க்க: ஆபிரகாம், தாவீது, எருசலேம், பெத்லகேம், எபூசியர்கள்)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H6726