ta_tw/bible/names/bethlehem.md

3.5 KiB

பெத்லகேம், எப்பிராத்தா

உண்மைகள்:

பெத்லகேம், இஸ்ரவேல் தேசத்தில் எருசலேம் நகருக்கு அருகே ஒரு சிறிய நகரம். இது " எப்பிராத்தா " என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒருவேளை அதன் உண்மையான பெயராக இருக்கலாம்.

தாவீது ராஜா அங்கு பிறந்தார் என்பதால் பெத்லெகேம் "தாவீதின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது.

  • மீகா தீர்க்கதரிசி, "பெத்லகேம் எப்பிராத்தாவிலிருந்து" மேசியா வருவார் என்று சொன்னார்.
  • அந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற இயேசு பல வருடங்கள் கழித்து பெத்லகேமில் பிறந்தார்.
  • "பெத்லெகேம்" என்பது "அப்பத்தின் வீடு" அல்லது "உணவின் வீடு" என்பதாகும்.

(மேலும் காண்க: காலேப், தாவீது, மீகா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 17:2 தாவீது பெத்லகேம் நகரத்தைச்சேர்ந்த ஒரு மேய்ப்பராக இருந்தார்.
  • 21:9 மேசியா ஒரு கன்னியிடமிருந்து பிறப்பார் என்று ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தார். மீகா தீர்க்கதரிசி , அவர் பெத்லகேம் நகரத்தில் பிறப்பார் என்று சொன்னார்.
  • __23:4__யோசேப்பும் மரியாளும் நாசரேத்தில் வாழ்ந்த இடத்திலிருந்து பெத்லகேமுக்கு ஒரு நீண்ட பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஏனென்றால் அவளுடைய மூதாதையர் தாவீதின் ஊர் __பெத்லகேமாக__இருந்தது.
  • 23:6 "மேசியா,எஜமானன், __பெத்லகேமில்__பிறந்திருக்கிறார்!"

சொல் தரவு:

  • Strong's: H376, H672, H1035, G965