ta_tw/bible/names/caleb.md

4.2 KiB

காலேப்

உண்மைகள்:

கானானின் தேசத்தை உளவு பார்ப்பதற்காக மோசே அனுப்பிய பன்னிரெண்டு வேவுகாரர்களில் ஒருவராக காலேப் இருந்தார்.

  • கானானியரைத் தோற்கடிப்பதற்காக தேவனை நம்பும்படி அவரும் யோசுவாவும் மக்களிடம் சொன்னார்கள்.

யோசுவாவும் காலேபும் மட்டுமே அந்தத் தலைமுறையினரில் வாக்குப்பண்ணப்பட்ட தேசமாகிய கானானுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவர்களாக இருந்தனர்..

  • காலேப், எப்ரோனின் நிலம் அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரினார். அங்கே வாழ்கிற மக்களை தோற்கடிக்க தேவன் உதவிசெய்வார் என்று அவர் அறிந்திருந்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: எப்ரோன், யோசுவா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 14:4 இஸ்ரவேலர் கானானின் எல்லையை அடைந்தபோது, ​​மோசே இஸ்ரவேலின் கோத்திரத்திற்கு ஒருவராக பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அந்தத் தேசம் எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்பதற்கு அந்த நாட்டுக்குச் சென்று, உளவு பார்க்கும்படி அவர் அறிவுரைகளை கொடுத்தார்.
  • 14:6 உடனடியாக மற்ற இரண்டு வேவுகாரர்களான காலேப் மற்றும் யோசுவா, , "கானானிய மக்கள் உயரமானவர்களும் வலிமையுமானவர்கள் என்பது உண்மைதான், ஆனால் நாம் நிச்சயமாக அவர்களைத் தோற்கடிப்போம்! என்று கூறினார்கள். தேவன் நமக்காகப் போரிடுவார்! "
  • 14:8 "யோசுவா மற்றும் காலேபைத் தவிர, இருபது வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைவருமே இறந்துபோவார்கள், அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நுழைய மாட்டார்கள்."

அப்போது அவர்கள் அந்த நாட்டில் சமாதானமாக வாழ முடியும்.

சொல் தரவு:

  • Strong's: H3612, H3614