ta_tw/bible/kt/wordofgod.md

13 KiB

தேவனுடைய வார்த்தை, தேவனுடைய வார்த்தைகள், யெகோவாவின் வார்த்தை, கர்த்தருடைய வார்த்தை, சத்தியத்தின் வார்த்தை, வேதவாக்கியம், வேதவாக்கியங்கள்

விளக்கம்:

வேதாகமத்தில், “தேவனுடைய வார்த்தை” என்ற பதமானது, தேவன்மக்களோடு தொடர்புகொண்டு பேசிய அனைத்தையும் குறிக்கிறது. இதில் பேசப்பட்ட மற்றும் எழுதப்பட்ட செய்திகளை உள்ளடக்கியுள்ளது. இயேசு “தேவனுடைய வார்த்தை” என்றும் அழைக்கப்பட்டார்.

  • “வேதவாக்கியங்கள்” என்ற பதத்திற்கு “எழுத்துக்கள்” என்று அர்த்தம். இது புதிய ஏற்பாட்டில் மட்டும்பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது பழைய ஏற்பாடாகிய எபிரேய வேதவாக்கியங்களைக் குறிக்கிறது. இந்த எழுத்துக்கள், அநேக வருடங்களுக்குப் பிறகு வரும் மக்கள் வாசிப்பதற்காக மக்களிடம் அவர் எழுதிவைக்கும்படி சொல்லப்பட்ட தேவனுடைய செய்தியாகும்.
  • ஒன்றுகொன்று தொடர்புடைய வார்த்தைகளான “யெகோவாவின் வார்த்தை” மற்றும் “கர்த்தருடைய வார்த்தை”யானது அடிக்கடி, வேதாகமத்தில் உள்ள ஒரு தீர்க்கதரிசி அல்லது ஒரு நபருக்கு தேவனால் கொடுக்கப்பட்ட சிறப்பான செய்தியைக் குறிக்கிறது.
  • சிலநேரங்களில் இந்தப் பதம், “வார்த்தை” அல்லது “என்னுடைய வார்த்தை” அல்லது “உம்முடைய வார்த்தை” (தேவனுடைய வார்த்தையைக் குறித்துப் பேசும்போது) என்று சாதாரணமாக காணப்படுகிறது.
  • புதிய ஏற்பாட்டில், இயேசு “வார்த்தை” என்றும் “தேவனுடைய வார்த்தை” என்றும் அழைக்கப்படுகிறார். அவர் தாமே தேவனாக இருப்பதால், தேவன் யார் என்று இயேசு முழுமையாக வெளிப்படுத்துகிறார் என்று இந்த பட்டங்கள் விளக்குகின்றன.

“சத்தியத்தின் வார்த்தை” என்ற பதம், அவருடைய செய்தி அல்லது போதனையான “தேவனுடைய வார்த்தை”யைக் குறிக்கும் இன்னொரு வழியாகும். இது ஒரே ஒரு வார்த்தையை மட்டும் குறிப்பிடுபவை அல்ல.

  • சத்தியத்தின் தேவ வார்த்தையானது, இயேசுவின் மூலமாக தம்மைப்பற்றியும், அவருடைய சிருஷ்டிப்பு, அவருடைய இரட்சிப்பின் திட்டம் ஆகியவற்றைக்குறித்து தமது மக்களுக்குக் கற்றுக்கொடுத்த அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
  • இந்தப் பதம் தேவன் நமக்குச் சொன்னவைகள் உண்மையானதாகவும், சத்தியமானதாகவும்,நிஜமானதாகவும் இருக்கிறது என்ற உண்மையை வலியுறுத்துகிறது.

மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்

  • பின்னணியின் அடிப்படையில், இந்தப் பதத்தை மொழிபெயர்க்கும்போது, “யெகோவாவின் செய்தி” அல்லது “தேவனுடைய செய்தி” அல்லது “தேவனுடைய போதனைகள்” என்பவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.

  • இந்த பதத்தை, தேவனுடைய வார்த்தைகள்” அல்லது “யெகோவாவின் வார்த்தைகள்” என்று சில மொழிகளில் பன்மையில் மாற்றுவது மிகச் சாதாரணமாக இருக்கலாம்.

  • “யெகோவாவின் வார்த்தை வந்தது” என்ற இவ்வார்த்தைகள், தேவன் தமது தீர்க்கதரிசிகள் அல்லது தமது மக்களிடம் கூறியவற்றைக் குறிப்பிடுவதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. இது “யேகோவா இந்த செய்தியை பேசினார்” அல்லது “யேகோவா இந்த வார்த்தைகளைப் பேசினார்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

  • “வேதவாக்கியம்” அல்லது “வேதவாக்கியங்கள்” என்ற இப்பதங்களை “எழுத்துக்கள்” அல்லது “எழுதப்பட்ட தேவனுடைய செய்தி” என்றும் மொழிபெயர்க்கலாம். இந்தப் பதத்தை, “வார்த்தை” என்ற பதத்தை மொழிபெயர்த்ததிலிருந்து வித்தியாசமாக மொழிபெயர்க்க வேண்டும்.

  • “வார்த்தை”என்பது தனியாக வரும்போது, அது, தேவனுடைய வார்த்தையைக் குறிக்கிறது. மேலும் இதை, “செய்தி” அல்லது “தேவனுடைய வார்த்தை” அல்லது “போதனைகள்” என்றும் மொழிபெயர்க்கலாம். மேலும், பரிந்துரைக்கப்பட்ட வேறு மொழிபெயர்ப்புகளை கருத்தில்கொள்ளவும்.

  • “வார்த்தை” என்பது வேதாகமத்தில் இயேசுவைக் குறிப்பிடும்போது, இந்தப் பதத்தை “செய்தி” அல்லது “சத்தியம்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

  • “சத்தியத்தின் வார்த்தை” என்பதை “தேவனுடைய மெய்யான செய்தி” அல்லது “தேவனுடைய உண்மையான வார்த்தை”என்றும் மொழிபெயர்க்கலாம்.

  • உண்மையாக இருத்தலின் அர்த்தம் இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பானது உள்ளடக்கி இருப்பது மிகவும் முக்கியமாகும்.

(மேலும் பார்க்க: தீர்க்கதரிசி, உண்மை, வார்த்தை, யேகோவா)

வேதாகமக் குறிப்புக்கள்:

வேத கதைகளிலிருந்து உதாரணங்கள்:

  • 25:7 தேவனுடைய வார்த்தையில், “உன் தேவனாகிய கர்த்தரையே ஆராதித்து,அவரையே சேவிப்பாயாக” என்று தமது மக்களுக்குக் கட்டளையிடுகிறார்.
  • 33:6 ஆகவே, “விதையானது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது” என்று இயேசு விளக்கினார்.
  • 42:3 பிறகு இயேசு, மேசியாவைக்குறித்து தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறது என்று அவர்களுக்கு விளக்கினார்.
  • 42:7 “என்னைக் குறித்து தேவனுடைய வார்த்தையில் எழுதப்பட்ட அனைத்தும் நிறைவேறவேண்டும் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்” என்று இயேசு சொன்னார். பின்பு அவர்கள் தேவனுடைய வார்த்தையை புரிந்துகொள்ளும்படி அவர் அவர்களுடைய மனதைத் திறந்தார்.
  • 45:10 பிலிப்பு, இயேசுவின் நற்செய்தியை அவர்களுக்குச் சொல்வதற்காக மேலும் மற்ற வேதவாக்கியங்களைப் பயன்படுத்தினான்.
  • 48:12 ஆனால் இயேசுவே எல்லாத் தீர்க்கதரிசிகளைவிட மிகப்பெரியவர். அவர் தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார்.
  • 49:18 நீங்கள் ஜெபிக்கவும், அவருடைய வார்த்தையைப் படிக்கவும், மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து அவரை ஆராதிக்கவும், அவர் உங்களுக்குச் செய்தவற்றை மற்றவர்களுக்குச் சொல்லவும் தேவன் உங்களிடம் கூறுகின்றார்.

சொல் தரவு:

  • Strong's: H561, H565, H1697, H3068, G3056, G4487