ta_tw/bible/kt/covenantfaith.md

3.4 KiB

உடன்படிக்கையின் உண்மை, உடன்படிக்கையின் விசுவாசம், அன்புள்ள தயவு,கைவிடாத அன்பு

வரையறை:

தம்முடைய மக்களுக்கு செய்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவனுடைய பொறுப்பை விவரிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

  • "உடன்படிக்கை" என அழைக்கப்பட்ட முறையான உடன்படிக்கைகளில் தேவன் இஸ்ரவேலருக்கு வாக்குறுதி அளித்தார்.
  • யெகோவாவின் "உடன்படிக்கையின் உண்மைத்தன்மை" அல்லது "உடன்படிக்கையின் நேர்மையானது", தம்முடைய ஜனங்களுக்காக தம் வாக்குறுதிகளை வைத்திருப்பதைக் குறிக்கிறது.
  • அவருடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதற்கு தேவனின் உண்மைத்தன்மையானது அவருடைய மக்களுக்கு அவருடைய கிருபையின் வெளிப்பாடு ஆகும்.
  • "நேர்மை" என்பது அது உறுதிப்படுத்தப்பட்டு, நம்பகமானதாகவும், செய்யப்படும் வாக்குறுதியை சொல்லவும், வேறொருவருக்கு நன்மை தரும் மற்றொரு வார்த்தையாகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த வார்த்தையை மொழிபெயர்க்கப்படும் வழி, "உடன்படிக்கை" மற்றும் "உண்மைத்தன்மை" எவ்வாறு மொழிபெயர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்து இருக்கும்.
  • இந்த வார்த்தையை மொழிபெயர்க்க மற்ற வழிகள், "உண்மையான அன்பு" அல்லது "நேர்மையான, உறுதியான அன்பு" அல்லது "அன்பைச் சார்ந்த தன்மையை" உள்ளடக்கியிருக்கலாம்.

(மேலும் காண்க: உடன்படிக்கை, விசுவாசமுள்ள, கிருபை, இஸ்ரவேல், தேவனுடைய மக்கள், வாக்குறுதி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2617