ta_tw/bible/other/wine.md

5.6 KiB

திராட்சை இரசம், திராட்சை இரசங்கள், தோல்பை, புதிய திராட்சை இரசம்

விளக்கங்கள்

வேதாகமத்தில், “திராட்சை இரசம்” என்ற பதம், திராட்சை பழங்களின் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் புளிப்பேற்றப்பட்ட திரவத்தின் ஒருவகையைக் குறிக்கிறது. திராட்சை இரசம், மிருகங்களின் தோலினால் செய்யப்பட தோல்பைகளில் ஊற்றிவைக்கப்பட்டது.

  • “புதிய திராட்சை இரசம்” என்ற பதம் திராட்சைப் பழத்திலிருந்து தற்போதுதான் பிழியப்பட்டதும் இன்னமும் புளிப்பேற்றப்படாத திராட்சை இரசத்தைக் குறிக்கிறது. சிலநேரங்களில் “திராட்சை இரசம்” என்ற பதம் புளிப்பேற்றப்படாத திராட்சை இரசத்தைக் குறிக்கிறது.
  • திராட்சை இராசத்தைத் தயாரிக்க, திராட்சையிலிருந்து சாற்றை பிழிவதற்காக திராட்சை ஆலையில் திராட்சை நசுக்கப்படுகிறது. இறுதியில் திராட்சை இராசமானது புளிப்பாகி அதிலிருந்து ஆல்கஹால் உருவாகிறது.
  • வேதாகம நாட்களில், திராட்சை இராசமானது உணவோடு அருந்தப்படும் சாதாரணமான பானம் ஆகும். அது தற்காலத்தில் இருப்பதைப்போன்று அதிகப்படியான ஆல்கஹால் அதில் இல்லை.
  • உணவிற்காக திராட்சை இராசமானது பரிமாறப்படுவதற்கு முன்பு, அது பொதுவாக தண்ணீருடன் கலக்கப்பட்டது.
  • திராட்சை இரசம் கசிகிற விரிசல் ஏற்பட்ட பழைய பெலவீனமான தோல்பைகள், திராட்சை இரசம் கசிகிற அளவிற்கு வெடிப்புகள் ஏற்படும். புதிய தோல்பைகள், மென்மையாகவும் வளைந்துகொடுக்கக்கூடியதாகவும் எளிதில் கிழியாததாகவும், திராட்சைஇரசத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்கக்கூடியதாகவும் இருக்கிறது.
  • உங்களுடைய கலாச்சாரத்தில் திராட்சை இரசம் அறியப்படாதவையாக இருக்குமென்றால் “புளிப்படையச் செய்த திராட்சை சாறு” அல்லது “திராட்சை என்னும் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட புளிப்படையச் செய்த பானம்” அல்லது “புளிப்படையச் செய்த பழத்தின் பானம்” என்று மொழிபெயர்க்கலாம். (பார்க்க: தெரியாதவைகளை எப்படி மொழிபெயர்ப்பது)
  • “தோல்பை” யை மொழிபெயர்க்கும் வழிகள் “”திராட்சை இரசத்திற்கான பை” அல்லது “திராட்சை இரசத்திற்காக மிருகத்தின் தோலினாலான பை” என்பவைகளை உள்ளடக்க வேண்டும்.

(மேலும் பார்க்க: திராட்சை, திராட்சைச் செடி, திராட்சைத் தோட்டம், திராட்சை ஆலை)

வேதாகமக் குறிப்புகள்:

நொறுக்கப்பட்ட

சொல் தரவு:

  • Strong's: H2561, H2562, H3196, H4469, H4997, H5435, H6025, H6071, H8492, G1098, G3631, G3820, G3943