ta_tw/bible/other/winepress.md

2.7 KiB

திராட்சை ஆலை

விளக்கம்:

வேதாகம காலங்களில், “திராட்சை ஆலை” என்பது மிகப் பெரிய தொட்டி அல்லது திராட்சை இரசம் தயாரிக்கப்படுவதற்காக திராட்சையை பிழியப்படும் திறந்த வெளியிலுள்ள இடம் ஆகும்.

  • இஸ்ரவேலில்,பொதுவாக திராட்சை ஆலைகள், கற்பாறைகளில் வெட்டப்பட்ட அகலமானவைகளாகவும், பெரியவைகளாகவும் இருந்தன. திராட்சைக் கொத்துக்கள் துளையின் தட்டையான அடிப்பகுதியில் போடப்பட்டு, திராட்சைச் சாறு வெளியே வருவதற்காக மக்கள் தங்கள் கால்களால் பழங்களை மிதித்தார்கள்.
  • வழக்கமாக, திராட்சை ஆலையானது,மேல் நிலையில் திராட்சை பழங்கள் மிதிக்கப்பட்டு அதிலிருந்து வழியும் இரசமானது கீழ்நிலையில் சேர்க்கப்படுவது என்ற இரண்டு நிலைகளைக் கொண்டதாக இருந்தன.
  • “திராட்சை ஆலை” என்ற பதம் வேதாகமத்தில் துன்மார்க்க மக்களின்மேல் ஊற்றப்படுகிற தேவனுடைய கோபத்திற்கு அடையாளமாக உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது. (பார்க்க: உருவகம்

(மேலும் பார்க்க: திராட்சை, கடுங்கோபம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1660, H3342, H6333, G3025, G5276