ta_tw/bible/kt/wrath.md

3.7 KiB

கடுங்கோபம், கடும் சினம்

விளக்கங்கள்:

கடுங்கோபம் என்பது சிலநேரங்களில் நீண்ட நாட்கள்வரை நீடிக்கும் மிக அதிகமான கோபம் ஆகும். இது மிகவும் குறிப்பாக, பாவத்திற்குத் தேவனுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பையும், அவருக்கு விரோதமாக கலகம் செய்யும் மக்களுக்கான தண்டனையையும் குறிக்கிறது.

  • வேதாகமத்தில், “கடுங்கோபம்” என்பது, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறவர்கள்மேல் வரும் தேவனுடைய கோபத்தைக் குறிக்கிறது.
  • “தேவனுடைய கோபம்” என்பது பாவத்திற்கு அவருடைய நியாயத்தீர்ப்பையும், தண்டனையையும் குறிக்கிறது.
  • தேவனுடைய கோபம் என்பது பாவத்திலிருந்து மனம் திரும்பாதவர்களுக்கு வரும் நீதியுள்ள தண்டனை ஆகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பதத்தை “மிகக் கடுமையான கோபம்” அல்லது “நீதியுள்ள நியாயத் தீர்ப்பு” அல்லது “கோபம்” என்று வேறுவகையில் மொழிபெயர்க்கலாம்.
  • தேவனுடைய கடுங்கோபத்தைக் குறித்துப் பேசும்போது, இவ்வார்த்தையை மொழிபெயர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை அல்லது சொற்றொடர், பாவத்திற்கு இணையாகவோ அல்லது எளிதில் உணர்சிவசப்படுவதையோ குறிக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். தேவனுடைய கடுங்கோபம் நீதியுள்ளதும் பரிசுத்தமானதாகவும் இருக்கிறது.

(மேலும் பார்க்க: நியாதிபதி, பாவம்

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H639, H2197, H2528, H2534, H2740, H3707, H3708, H5678, H7107, H7109, H7110, H7265, H7267, G2372, G3709, G3949, G3950